Published:Updated:

தருமபுரி டூ மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு

தருமபுரி டூ மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு
தருமபுரி டூ மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு

தருமபுரி டூ மொரப்பூர் புதிய ரயில் பாதை திட்டம் மத்திய ரயில்வே துறை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகத் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்  சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார். அந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் மார்ச் 4-ம் தேதி தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற இருப்பதாக, பா.ம.க தரப்பில் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் என்பது தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவுத் திட்டம். இந்த திட்டத்தை மத்திய அரசு குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களை மாநில தலைநகரத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கொள்கை முடிவில், இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

தருமபுரி - மொரப்பூருக்கு 36 கி.மீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதை அமைப்பதன் மூலம் தருமபுரி மாநில தலைநகரமான சென்னையுடன் இணைகின்றது. இத்திட்டத்தைக் கொண்டுவரப் பா.ம.க பல ஆண்டுகளாகப் போராடித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. 2014 ஆம் ஆண்டு பிறகு, இத்திட்டத்தைச் செயல்படுத்த, மத்திய ரயில்வே துறை அமைச்சர்களாகப் பதவி வகித்த சதானந்த கவுடா, சுரேஷ் பிரபு தற்போதைய அமைச்சர் பியூஸ் கோயலையும் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளையும் 18 முறை சந்தித்து இத்திட்டத்தைச் செயல்படுத்த அழுத்தம் தரப்பட்டது.

அதன் விளைவாக ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தருமபுரி டூ மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு ரூ358.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்தார். அதை நிறைவேற்றும் விதமாக மார்ச் 4-ம் தேதி தருமபுரி வள்ளலார் திடலில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் மாநில அமைச்சர்கள் முன்னிலையில் தருமபுரி டூ மொரப்பூர் புதிய ரயில் பாதை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளதாகப் பா.ம.க செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.  

தருமபுரி மொரப்பூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1906 ஆம் ஆண்டு முதல் 1941 ஆம் ஆண்டு வரை ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.