Published:Updated:

`இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்' - ரவிசாஸ்திரியிடம் சொன்ன கேப்டன் கோலி!

`இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்' - ரவிசாஸ்திரியிடம் சொன்ன கேப்டன் கோலி!
`இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான்' - ரவிசாஸ்திரியிடம் சொன்ன கேப்டன் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள்  கிரிக்கெட் போட்டியில் தோனி - கேஜர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அணி வெற்றிபெற்றது. இந்தப்போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, “ பந்துவீச்சில் நாங்க சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங் ஆடும் போது விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டோம். இந்த போட்டி வெற்றி பெறுவதற்கு சற்று கடினமான போட்டியாகும்.

இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது. இந்திய அணி 99 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தவித்த போது தோனி களமிறங்கினார். ஆட்டத்தின் தன்மையை புரிந்துகொண்ட தோனி பொறுப்பை அவராகவே ஏற்றுக்கொண்டார். கேதர் ஜாதவ் - தோனி விளையாடுவதைப் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. அவர்கள் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 
 

இந்தப்பிட்சில் ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசினார். 10 ஓவர் வீசியவர் 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தது.  அவரே ஃபீல்டிங்கை செட் செய்தார்.இது பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. குல்தீப் சிறப்பாக செயல்பட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஷமி சிறப்பாகச் செயல்பட்டார். அவரது பந்துவீச்சில் லைன் மற்றும் லெத் சிறப்பாக இருந்தது. விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தார். நாங்கள் 99 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த போது இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என ரவிசாஸ்திரியிடம் கூறினேன். உலகக்கோப்பை போன்ற தொடர்களுக்கு  முன்னால் நம்மைச் சோதித்து கொள்வது நல்லதாக அமையும். பும்ரா, ஜாதவ் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர்.” என்றார்.