Published:Updated:

மகா சிவராத்திரி: கங்கைகொண்ட சோழபுரத்தில் வெகு விமரிசையாகத் தொடங்கியது நாட்டியாஞ்சலி

மகா சிவராத்திரி: கங்கைகொண்ட சோழபுரத்தில் வெகு விமரிசையாகத் தொடங்கியது நாட்டியாஞ்சலி
மகா சிவராத்திரி: கங்கைகொண்ட சோழபுரத்தில் வெகு விமரிசையாகத் தொடங்கியது நாட்டியாஞ்சலி

சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு விமரிசையாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியைக் கண்டு கழிக்க வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் மகாசிவராத்திரி விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி  நிகழ்ச்சிகள் நேற்று இரவு தொடங்கியது. நிகழ்ச்சிக்குக் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் தலைவர் பொறியாளர் கோமகன் தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ ராமஜெயம் துவக்கி வைக்கிறார். அன்னாபிஷேக கமிட்டி உறுப்பினர் கோமதிநாயகம், தலைமையாசிரியர் தயாளன், சிறப்பு விருந்தினராகச் சென்னை மேகநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மற்றும் மதியழகன் மேம்பாட்டுக் குழுமச் செயலாளர் மகாதேவன், பேராசிரியர் முரளி உட்படப் பலர் பங்கேற்றனர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து இன்று இரவு 7 மணி முதல் நாளை விடியற்காலை வரையும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.