இன்டர்நெட்.... பிரவுசிங் சென்டர்களில் தொடங்கி மொபைல் வரை வந்த இந்த வசதி, தற்போது கார்களுக்கும் வந்துவிட்டது! ஆம், சமீபத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பலத்த பரபரப்பை உண்டாக்கியிருக்கும் MG ஹெக்டர் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவை, ‘இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார்’ என்ற போட்டியில் ஒன்றாகக் குதித்திருக்கின்றன. இந்த இரு எஸ்யூவிகளும், இந்தியாவில் கனெக்டட் கார்கள் என்ற வருங்காலத் தொழில்நுட்பத்துக்கான ஆரம்ப வித்தாக இருக்கும். காரின் இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம், M2M நெட்வொர்க்கில் இயங்கும் விதத்தில் அப்கிரேடு செய்யப்பட்டிருக்கும். கனெக்ட்டிவிட்டி தேவைக்காக, e-SIM ஒன்றும் பொருத்தப்படும். எனவே இதற்கான சர்வருடன், காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எப்போதும் தொடர்பில் இருக்கும். இதற்கெனப் பிரத்யேகமாக ஒரு மொபைல் செயலி ஒன்றும் உடன் வழங்கப்படும். முன்னே சொன்ன கார்களில் பொதுவாக இருக்கும் வசதிகளைத் தற்போது பார்க்கலாம்.

ரியல் டைம் வெஹிக்கிள் டிராக்கிங்:

காரின் இருப்பிடத்தை நேரடியாக அறிய முடியும் என்பதால், நீண்ட நேர/தூரப் பயணங்களில் காரில் இருப்பவர்களின் நிலை/இடம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

லைவ் டிராஃபிக் அப்டேட்ஸ்:

எந்த நேரமாக இருந்தாலும், நீங்கள் செல்லும் வழியில் டிராஃபிக் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

வாய்ஸ் அசிஸ்ட் காலிங்:

செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தத் தொழில்நுட்பம், காரில் சில விஷயங்களை நமது குரல் வழியே கட்டளையாகப் பெற்று அவற்றை நிறைவேற்றும். உதாரணத்துக்கு, நீங்கள் உங்கள் மொபைலில் இருக்கும் ராம் என்பவரை அழைக்க விரும்பினால், “Please Call Ram” அல்லது
“I Want to Call Ram” என்றாலே போதுமானது.

புஷ் மேப்ஸ் ஆப்:

காரின் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மொபைல் செயலியில், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தைத் தேடுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதை உறுதிப்படுத்திய பிறகு, அந்தச் செயலியைப் பயன்படுத்தி காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துக்கு அந்த லொக்கேஷனை மெசேஜ்போல அனுப்பிவிட முடியும். இது குறிப்பிட்ட காலத்துக்கு ஏற்ப தானாகவே அப்டேட் ஆகும் என்பதுடன், காரில் இருக்கும் அனைவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற லொக்கேஷனை அனுப்பலாம்.

வாய்ஸ் அசிஸ்ட் நேவிகேஷன்:

உங்களின் விருப்பங்களின் அடிப்படையில், உங்களுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க் - வங்கி - உணவகம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, அதற்கான வழியும் கிடைக்க வகை செய்யப்படும். அங்கே இருக்கும் டிராஃபிக்குக்கு ஏற்ப மாற்று வழியும் காண்பிக்கப்படும்.

ஜியோஃபென்ஸ்:

காரின் இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் மொபைல் செயலியைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட தூரத்துக்கான எல்லையை நிர்ணயித்துக் கொள்ளலாம். எனவே கார் அந்த தூரத்தைக் கடக்கும்போது, போதிய காலநிலையில் உங்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை வந்துகொண்டே இருக்கும். காரை வீட்டில் விட்டுச் செல்பவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப்:

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து சில நிமிடங்களில் கிளம்பப் போகிறீர்கள் என எடுத்துக் கொள்வோம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே காரை ஸ்டார்ட் செய்து, ஏசியை ஆன் செய்யலாம். (எத்தனை நிமிடத்துக்கு என்பதையும் செட் செய்யலாம்). ஒருவேளை நீங்கள் கிளம்ப அதிகநேரம் பிடிக்குமெனில், மீண்டும் காரை ஆஃப் செய்யவும் முடியும். ரிமோட் கிளைமேட் கன்ட்ரோல் வசதியும், இந்த அம்சத்தின் ஓர் அங்கம்.

ஆட்டோ க்ராஷ் நோட்டிஃபிகேஷன்:

கார் விபத்துக்குள்ளாகிவிட்டது என்றால், இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் வாயிலாக கார் நிறுவனத்தின் கால் சென்டருக்குத் தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் விபத்து நேர உடனடி சேவையை வழங்குவார்கள். தவிர, நீங்கள் இதில் சேமித்து வைத்திருக்கும் முக்கியமான 5 எண்களுக்கு, உங்களின் லொக்கேஷன் மற்றும் விபத்துத் தகவல் குறுஞ்செய்தியாகப் போய்விடும்.

எமெர்ஜென்சி அசிஸ்டன்ஸ் (SOS):

ரியர்வியூ மிரரில் SOS பட்டன் என ஒன்று இருக்கும். இதனால் உங்களுக்கோ அல்லது காருக்கோ ஏதாவது இடர்பாடு ஏற்பட்டால், இந்த பட்டனை உடனடியாக அழுத்திவிடவும். இது கால் சென்டரைத் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான மருத்துவ உதவி அல்லது காருக்கான மெக்கானிக்கல் சப்போர்ட் ஆகியவற்றைக் கிடைக்க வழி செய்யும்.

ஃபைண்ட் மை கார் லொக்கேஷன்:

உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ/நண்பர்களுக்கோ நீங்கள் காரைக் கொடுத்தனுப்புகிறீர்கள். திடீரென உங்கள் கார் எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துக்கான மொபைல் செயலியில் இந்த வசதியைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம். கார் ஒருவேளை தொலைந்துபோனாலும் இது கைகொடுக்கும்.

ரோடு சைடு அசிஸ்டன்ஸ் (RSA):

ஆள் அரவமற்ற சாலைகளில் பயணிக்கும்போது கார் பிரேக் டவுன் ஆக நேர்ந்தால், ரியர் வியூ மிரரில் இருக்கும் RSA பட்டனை அழுத்தவும். இது கார் நிறுவனத்தின் கால் சென்டரை அழைத்து, தகவல் தெரிவிக்க உதவும். உங்களின் விபரம் மற்றும் காரின் கோளாறு ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற உதவி விரைவில் கிடைத்துவிடும்.

ரிமோட் டோர் லாக்/அன்லாக்:

தற்போதைய மாடல்களில் காரின் சாவியில் இருக்கும் பட்டன்களைப் பயன்படுத்தியே கதவை லாக்/அன்லாக் செய்ய முடியும். இந்த வசதி இருந்தால், எங்கிருந்தாலும் காரின் கதவை லாக்/அன்லாக் செய்ய முடியும். அவசர கதியில் காரைப் பூட்டாமல் வந்துவிட்டால் இது உதவும்.

டிரைவிங் பிஹேவியர்:

ஒரு காரின் ஆயுள், அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது. எனவே பயணித்திருக்கும் தூரம், அதிகபட்ச/சராசரி வேகம், உடனடியான ஆக்ஸிலரேஷன், திடீர் பிரேக்கிங் குறித்த தகவல்களை ஒவ்வொரு ட்ரிப்புக்கும் இது அப்டேட் செய்யும்.

- ராகுல் சிவகுரு