Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!

Published:Updated:
ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
ஐடியா அய்யனாரு!

பிக்பாஸின் மூன்றாவது சீசனில் பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன். வழக்கமாக பிக்பாஸ் பிளாட்பாரத்தைதான் பிரசாரக் களமாகப் பயன்படுத்துவார் அவர். இப்போது பிரசாரக் களங்களே ரணகளமாக இருப்பதால், ஷூட்டிங்கின்போது கன்டென்ட்டுக்கு என்ன செய்வார் என்பதுதான் மில்லியன் பவுண்ட் கேள்வி. கன்டென்ட் கொடுப்பதற்காகவே இந்தப் பிரபலங்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைத்தால் அவருக்கும் ஜாலியாக இருக்கும். நமக்கும் பொழுதுபோகும்.

ஐடியா அய்யனாரு!

துரைமுருகன்
வுன்ட்டர் மணியாக ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்த துரைமுருகனை, ஒரே அறிவிப்பில் ஆலயமணி சிவாஜியைப்போல சோகமாகச் சுற்றவிட்டு விட்டார்கள். அவர் சோகத்தை மறைக்கவும், ஷோவில் காமெடி கன்டென்ட் தேற்றவும் கமல் - துரைமுருகன் பேச்சுப் போட்டியைப் பார்க்கவும் அவரை உள்ளே கொண்டுவரலாம்.

 விஷால்
டிகர் சங்கத் தேர்தல் சீக்கிரமே வரப்போகிறது. எக்கச்சக்க புகார்களால் ரிப்பேர் ஆகியிருக்கும் பெயரை பிக்பாஸில் கிடைக்கும் மைலேஜ் மூலம் சரிசெய்துகொள்ளலாம். கமலை நடிகர் சங்கத் தேர்தலுக்கு விஷாலும் விஷாலை சட்டசபை தேர்தலுக்குக் கமலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதுபோக, விஷால் இருக்கிறார் என்று தெரிந்தாலே ஒரு கூட்டம் வீட்டுக்கு பூட்டுபோடக் கிளம்பிவிடும். ஆஃப் ஸ்க்ரீனிலும் இப்படி ஏகப்பட்ட கன்டென்ட்கள் கிடைக்கும்.

பாபா ராம்தேவ்
வி
ஜய் டி.வி-யின் பழைய விருந்தாளிதான். தமிழ் மக்களுக்கும் பழகிய முகம். பி.ஜே.பி-யை வைத்து செய்துகொண்டிருந்த வியாபாரம் முன்னைப்போல கல்லா கட்டவில்லை. எனவே, இப்படி இறங்கி மார்க்கெட்டிங் செய்யலாம். தவிர, இவர் வீட்டுக்குள் இருந்தால், குத்தாட்டம் பிளஸ் குண்டலினி யோகா கலந்து வெரைட்டியாக கன்டென்ட் தருவார். பிக்பாஸ் ரேட்டிங் பிய்த்துக்கொள்ளும்.

தங்கபாலு
ல ஆண்டுகளாக, ரஃபேல் ஃபைல்கள்போல காணாமல் போயிருந்த தங்கபாலு, பிரசாரத்தின்போதுதான் பளீர் வெளிச்சத்துக்கு வந்தார். வந்த வேகத்தில் வைரலும் ஆகிவிட்டார். எப்படியும் ஷோவில் கமல் பேசும் பாதி டயலாக்குகள் புரியப்போவதில்லை. எனவே, வீட்டுக்குள் இருந்தபடி கமல் பேச்சுகளை மொழிபெயர்த்தால், கபீம்குபாமாக இருக்கும்.

  தமிழருவி மணியன்
வருக்கென பெரிதாக ஸ்க்ரிப்ட் ஒர்க் செய்யத் தேவையில்லை. ‘ரஜினி அரசியலுக்கு வருவார்’ என்ற ஒரே டயலாக்தான். அதையே காயத்ரி மந்திரம்போல முணுமுணுத்துக்கொண்டிருப்பார். அதைவைத்து கமல் செய்யும் அரசியலை மக்களும் குளிரக் காணலாம். மூன்று மாதங்கள் கழித்து வெளியே வந்து, ‘என்ன இன்னும் ரஜினி கட்சி ஆரம்பிக்கலையா? சரி... ஆனாலும் அவர் வந்துடுவாரு’ என்று பழைய இடத்துக்கே போய்விடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!