நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!

மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!

மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!

ந்திய  இன்ஷூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ) கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங் களுக்கு மூன்றாம் தரப்பு (Third party)  மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை அதிகரிக்கப் பரிந்துரை செய்துள்ளது. 

மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!

கார்களுக்கான பிரீமியம் தற்போதைய பிரீமியத்தைவிட 14% அதிகமாகவும், இரு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் 21.11% மற்றும் பொதுச்சரக்கு கேரியர்களுக்கான (டிரக்குகள்) பிரீமியம் 11% அதிகமாகவும் உயர்த்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், புதிய கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நீண்ட கால பாலிசி என்கிறபட்சத்தில், பிரீமிய விகிதங்களில் மாற்றம் ஏற்படாது. 

மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!

மேலும், புதிய கார்கள் வாங்கும்போது, ஓராண்டுக்குப் பதிலாக மூன்றாண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தும்போது, எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கும். புதிய இரு சக்கர வாகனங்களுக்கான ஐந்தாண்டு பிரீமியத்திலும் எந்தவித மாற்றம் இல்லாமல் பரிந்துரைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, ஒவ்வொரு வருடமும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ பாலிசியின் பிரீமியம் மற்றும் பாலிசி மாற்றங்களை மார்ச் மாதம் பொதுமக்களிடம் தந்து  கருத்துகளைச் சேகரித்து, ஏப்ரல் 1-ம் தேதி நடைமுறைக்குக் கொண்டுவரும். ஆனால், இந்த முறை மார்ச் 31-க்குப்பின்னும்,  2018-2019-ல் உள்ள பிரீமியத்தையே ஒருசில மாதங்களுக்கு நீட்டித்தது ஐ.ஆர்.டி.ஏ.ஐ. 

மோட்டார் வாகனங்கள்... அதிகரிக்கும் பிரீமியம்!

பிரீமியம் தொடர்பான இந்த மாற்றங்கள் குறித்த பொது மக்களின் கருத்துகளை அறிய 2019 மே மாதம் 29-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு, நடப்பு நிதியாண்டுக்கான பிரீமியம் மற்றும் பாலிசி மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த ஏழு ஆண்டுகளாக வசூலான பிரீமியத் தொகை, க்ளெய்ம் செய்த விதம் மற்றும் க்ளெய்ம் செய்த தொகை ஆகியவற்றின் அடிப்படையில் மோட்டார் வாகன பிரீமியத் தொகை பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த பிரீமியம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

எஸ்.ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர், wealthladder.co.in