Published:Updated:

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா
பிரீமியம் ஸ்டோரி
என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

Published:Updated:
என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா
பிரீமியம் ஸ்டோரி
என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

வீட்டுக்குள் நுழைந்தபோது,  நடிகை கனிகா தன் மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த உற்சாகம் நம்மை வழியனுப்பும்வரை குறையவேயில்லை. மற்ற கேள்விகளைவிட, மகனைப் பற்றி பேசும்போதெல்லாம் கனிகாவிடம் அவ்வளவு பூரிப்பு!

தமிழில் பெரிய இடைவெளி...

நல்ல புராஜெக்ட்ஸ் அமையலை. 13 வருஷங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கப்போறேன். பெரிய புராஜெக்ட், பெரிய ஹீரோவுடன் நடிக்கிறேன். அந்தப் படம் பற்றி விரைவில் அறிவிக்கிறேன். `நம்ம தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய இடைவெளியாகிடுச்சே’ என்கிற என் ஏக்கம், இந்த வருஷம் நிவர்த்தியாகிடும்.

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

இன்ஜினீயரிங் படிப்பு டு சினிமா கரியர்...

இந்தியாவில் டாப் 5 இன்ஜினீயரிங் காலேஜ்ல ஒண்ணு, ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி காலேஜ். அதில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சேன். படிப்பு பாதிக்கப்படும்னு, அப்போ வந்த `பாய்ஸ்’ பட ஹீரோயின் வாய்ப்பை மறுத்தேன். பிறகு `ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் அறிமுகமானேன். ‘திவ்யா’ங்கிற என் பெயரை ‘கனிகா’னு மாத்தி என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினாங்க. `ஆட்டோகிராஃப்’ படத்துல சிநேகா ரோல் முதலில் எனக்கு வர, என்னால நடிக்க முடியலை. அதனால அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில என்னை நடிக்கவெச்சார், சேரன் சார். கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்ச நேரத்துல சினிமா வாய்ப்புகளும் நிறைய வந்துச்சு. நான் சினிமாவைத் தேர்ந்தெடுத்தேன். `சிவாஜி’, `அந்நியன்’, `சச்சின்’ படங்களில் ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்திருக்கேன்.

தொடர்ந்து மலையாள சினிமாவில்...

கல்யாணமானதும் அமெரிக்காவில் ஆறு வருஷம் வசிச்சோம். இடையிடையே சாஃப்ட்வேர் நிறுவனப் பணியுடன், மலையாள சினிமாவிலும் நடிச்சேன். ஹீரோக்களுக்கு கல்யாணமானாலும், குழந்தை பிறந்தாலும், பிள்ளைங்களுக்குக் கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறமும்கூட இங்கே மார்க்கெட் இருக்கும். ஹீரோயின்களின் நிலை அப்படியில்லை. பல மொழி சினிமாக்களிலும் இதுதான் யதார்த்தம். விதிவிலக்கா, கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்கள் மலையாள சினிமாவில் நிறைய வருது. அதனாலதான் மலையாளத்தில் ஹீரோயினா தொடர்ந்து 13 வருஷமா நடிச்சிட்டிருக்கேன். இப்போகூட அங்கே பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியா நடிக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் உலகம்: தாயுள்ளம் தன்னிகரில்லாதது! - நடிகை கனிகா

அம்மா கனிகா...

என் மகன் ரிஷிக்கு எட்டு வயசாகுது. எல்லா அம்மாவுக்கும் தன் பிள்ளை ஸ்பெஷல்தான். ஆனா, என் மகன் எனக்குக் கூடுதல் ஸ்பெஷல். அமெரிக்காவில், பிறந்தபோதே அவனுக்கு இதய அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. பிஞ்சுக் குழந்தையா அவன் உடலளவில் அனுபவிச்ச வலிக்கு இணையானது, தாயாக மனதளவில் நான் அனுபவிச்ச வலி. அந்தச் சூழல்லதான், குழந்தை, குடும்பத்தைத் தவிர, இந்த உலகத்துல வேறெதுவும் பெரிசில்லைனு உணர்ந்தேன்.

அமெரிக்க வாழ்க்கை குழந்தைக்கு செட் ஆகலை. தாத்தா, பாட்டிகிட்ட வீடியோ கால்ல பேசுறது போதலைன்னு தோணிச்சு. சென்னைக்கு வந்துட்டோம். நம்ம ஊர்ல பையன் பாட்டிகூட விளையாடுறது, கதைகள் கேட்கிறதுனு மனசுக்கு ஆரோக்கியமான சூழல்லயும் சுதந்திரமாவும் வளர்றான். ரிஷியும் நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். விளையாடுறது, டான்ஸ் ஆடுறது, ஹோம் வொர்க் சொல்லிக்கொடுக்கிறது உட்பட அவனுடன் தினமும் அதிக நேரத்தைச் செலவிடுறேன். அவனை ஸ்கூல்ல பிக் அப், டிராப் பண்றது நான்தான். குழந்தையை அரவணைச்சிருக்கிற தாய் உருவத்துல என் கையில டாட்டூ போட்டிருக்கேன். இது நானே டிசைன் பண்ணினது. எங்க வீட்டுல வேலைக்காரங்க இல்லை. சமையல், வீட்டு வேலை உட்பட எல்லா வேலைகளையும் நானே பார்த்துக்கிறேன். அம்மாங்கிற பொறுப்பை விட, வேறெதுவும் எனக்குப் பெரிசில்லை. என் குழந்தையைப் பொக்கிஷமா பார்த்துக்கிறேன். தாயுள்ளம் தன்னிகரில்லாதது என்பதை அனுபவத்தில் உணர்றேன்.

ரெஸ்டாரன்ட் பிசினஸ்...

எனக்கு குக்கிங் ரொம்பப் பிடிச்ச விஷயம். அமெரிக்காவில் வசிச்சப்போ, நல்லா சமைக்கக் கத்துக்கிட்டேன். ரொம்ப வருஷங்களாவே, ரெஸ்டாரன்ட் பிசினஸ் செய்யணும்னு ஆசை இருந்துச்சு. சென்னையைத் தொடர்ந்து, ஏழாம் வகுப்பிலேயிருந்து ப்ளஸ் டூ வரை மதுரையிலதான் வளர்ந்தேன். மதுரைக்காரங்களோட விருந்தோம்பலும் உபசரிப்பும் சிறப்பா இருக்கும். அதனாலதான் `மதுரை ஜங்ஷன்’ங்கிற பெயர்ல சென்னை நீலாங்கரையில ரெஸ்டாரன்ட்  நடத்திட்டிருக்கேன். பிளாஸ்டிக் உட்பட சுற்றுச்சூழலுக்குக் கெடுதலான எந்தப் பொருளையும் நாங்க பயன்படுத்துறதில்லை. மேலும், புது கிளையைத் தொடங்க இருக்கோம்.

ஃபிட்னஸ் ஆர்வம்...

நமக்கு வயசு கூடக்கூடத்தான் ஆரோக்கியத் தின் அருமை புரியும். அமெரிக்காவின் ஜங்க் ஃபுட் உணவு முறையால் அந்த அருமையை அதிகமாவே உணர்ந்தேன். அதனால்தான் ஃபிட்னஸில் கவனம் செலுத்துறேன். இந்தத் தலைமுறையில சாப்பாடு, தூக்கம், மகிழ்ச்சிக்கான நேரம்னு எல்லாமே மாறிடுச்சு. அதனால எல்லோருக்குமே உடற்பயிற்சி அவசியம். தினமும் ஒரு மணி நேரம் ஜிம் போறேன். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுறேன். என் குழந்தையால எப்போதும் மகிழ்ச்சியா இருக்கேன். இதுதான் என் ஃபிட்னஸ் சீக்ரெட்!

-கு.ஆனந்தராஜ்,  படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism