Published:Updated:

அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்

அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்

என் அப்பாபடம்: கிரண் சா

அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்

என் அப்பாபடம்: கிரண் சா

Published:Updated:
அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்

``அப்பா மகள் உறவு என்பது வானவில் போர்த்திய வானம் போன்று மிகவும் அழகானது. மகளாகப் பிறக்கும் தேவதைகளே அப்பாக்களின் வாழ்க்கையில் அழிக்கமுடியாத வண்ணமாகப் படர்ந்து அழகுபடுத்துகின்றனர். என் அப்பாவும் அப்படிப்பட்டவர்தான். அவர்தான் என் வாழ்க்கையின் ஆதாரம்’’ என பிதா மீதான ப்ரியம் பகிரத் தொடங்குகிறார் ப்ரியா பவானிசங்கர்.

“எல்லாப் பெண்களுக்கும் அவங்க அப்பாதான் சூப்பர் ஹீரோ. எனக்கும் அப்படித்தான். கடவுள் எனக்குக் கொடுத்த பரிசாகத்தான் அப்பாவைப் பார்க்கிறேன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும்கிற எந்த வரையறையும் எங்கள் வீட்டில் இருந்தது இல்லை. நான் ஆசைப்படுவதைச் செய்கிற முழு சுதந்திரமும் சின்ன வயசிலேயே எனக்குக் கிடைச்சது.

அவர் போல ஒருவர்தான் கணவரா வரணும்! - ப்ரியா பவானிசங்கர்

குழந்தைகளின்கூடவே இருந்து வளர்ப்பதைவிட கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்பதில் அப்பாவுக்கு அவ்வளவு நம்பிக்கை. ஒரு விஷயத்தில் இருக்கக்கூடிய ப்ளஸ் அண்டு மைனஸ் பத்தி மட்டும் அப்பா சொல்லுவாங்க. அதைச் செய்யணுமா, செய்யக்கூடாதா என்பது எங்களின் முடிவுதான். நான் மீடியாவுக்கு வரும்போதுகூட எப்படி பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லிக்கொடுத்தாங்களே தவிர, மீடியா வேண்டாம்னு ஒரு நாளும் சொன்னது கிடையாது. என் சின்ன சின்ன ஆசைகளுக்கும் மதிப்புக் கொடுத்து என்னுடைய கனவுகளுக்குப் படிக்கட்டுகளாக இருந்து உயரத்தில் ஏற்றிவிட்டதும் அப்பாதான்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சுதந்திரமாகச் செயல்படும் எண்ணத்தை விதைக்கிறதுக்காக ஒரு ஏடிஎம் கார்டு கொடுத்து, `தேவைப்படும்போது பணம் எடுத்துக்கோ’னு சொன்னாங்க அப்பா. அதை ஏன் கொடுத்தாங்கன்னுகூட அப்போ நான் யோசிச்சது இல்ல. இப்ப நினைச்சா அப்பா எவ்வளவு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்கனு பெருமையா இருக்கு. இன்னிக்கும் அந்த ஏடிஎம் கார்டைதான் பயன்படுத்துறேன். அது எப்பவும் சம்திங் ஸ்பெஷல்!

உண்மையைச் சொல்லணும்னா எவ்வளவு ரூபாய் சம்பாதிச்சாலும் இப்ப வரை எனக்கான எல்லா பொருள்களையும் அப்பாகிட்டதான் கேட்கறேன். நான் கேட்கற பொருளை தேடித்தேடி ஆசையா வாங்கிட்டு வந்து, அதை என் கையில் கொடுக்கும்போது ‘எவ்வளவு உயரத்துக்கு போனாலும், எப்போதும் நீ எனக்குக் குழந்தைதான்’ என்பதுபோல அப்பா முகத்தில் ஒரு சின்ன பெருமிதம் தெரியும். அதுக்காகவே எப்பவும் குழந்தையாகவே இருக்கலாம்னு தோணும்.

நான் ரொம்பத் தைரியமான பொண்ணுன்னு எல்லாரும் சொல்றாங்க. காரணம், அப்பாதான். சின்ன வயசில் இருந்தே `உன்னால் முடியும்’னு அவங்க சொல்லி வளர்த்த வார்த்தைகள்தான் இன்னிக்கு என் எல்லா வெற்றிகளுக்கும் காரணமா இருக்கு. சந்தோஷமா நான் சிரிக்கணும்னாலும், உடைஞ்சுபோறப்ப கத்தி அழணும்னாலும் என் மனசு அப்பாவோட தோளைத்தான் தேடும்.

பொதுவாக எல்லா ஆண்களும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருப்பாங்க. அப்பா எங்க அம்மாவுக்கு பெஸ்ட் கணவரும்கூட. அம்மாவின் விருப்பங்களை நிறைவேற்ற அப்பா மணிக்கணக்கில் நேரம் செலவிடுவார். அவர் அம்மாவுக்காக ரசனையோடு பார்த்துப் பார்த்துச் செய்யும் சின்ன விஷயங்களில்கூட பெண்ணியவாதிகள் சொல்லும் அத்தனை விஷயங்களும் ஒளிஞ்சிருக்கும். அப்படிப்பட்ட என் அப்பாவின் பெயரை என் பெயரோடு சேர்த்து மத்தவங்க கூப்பிடும்போது அவ்வளவு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு.

என் அப்பாதான் என் அடையாளம். எல்லா பெண்களுக்கும் இருக்கும் அதே ஆசைதான் எனக்கும். எங்க அப்பா மாதிரி ஓர் ஆண்தான் எனக்குக் கணவரா வரணும்.

லவ் யூ அப்பா!''

-  சு.சூர்யா கோமதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism