Published:Updated:

`அபிநந்தன் மீசை வைத்தால் கட்டிங், ஷேவிங் இலவசம்!’ - சலூன் கடையில் குவிந்த இளைஞர்கள்

`அபிநந்தன் மீசை வைத்தால் கட்டிங், ஷேவிங் இலவசம்!’ - சலூன் கடையில் குவிந்த இளைஞர்கள்
`அபிநந்தன் மீசை வைத்தால் கட்டிங், ஷேவிங் இலவசம்!’ - சலூன் கடையில் குவிந்த இளைஞர்கள்

அபிநந்தன் வர்த்தமான் - கடந்த ஒரு வாரமாக இந்தியர்கள் அதிகம் உச்சரித்த பெயர். பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து இந்தியா திரும்பிய விமானப்படை வீரர்.

பிரபலமானது அபிநந்தன் மட்டுமல்ல அவரின் மீசையும்தான். அதுமட்டுமல்ல சிறிய கடைகள் முதல் பெரிய விற்பனையகங்கள் வரை அபிநந்தனை வைத்து, பல புதுப்புது சலுகைகளை அறிவித்தன. உதாரணமாக அபிநந்தன் என்ற பெயர் வைத்தவர்களுக்கு இலவச பீட்சா வழங்கப்படும் என சிறப்புச் சலுகை ஒன்றை பீட்சா ஹட் நிறுவனம் அறிவித்தது.


இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பிரபல சலூன் கடை ஒன்று அபிநந்தன் மீசை வைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு  இலவசமாகச் சர்வீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே, இந்தியா முழுவதும் அபிநந்தனின் மீசை டிரெண்டாகி வரும் நிலையில், இவரின் இந்த அறிவிப்பு பெங்களூர் இளைஞர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் கோரமங்கலாவில் இயங்கி வரும் நானேஷ் சலூனில்தான் இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்துப் பேசிய சலூன் கடையின் உரிமையாளர், `அபிநந்தன் மீசை வைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹேர் கட்டிங், ஷேவிங் செய்யப்படும் என அறிவித்ததிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமாக வந்து அபிநந்தன் மீசை வைத்துக் கொண்டனர். இது நான் அவருக்குச் செய்யும் மரியாதை’ என்று குறிப்பிட்டார்.