
கே.உமாபதிஹெல்த்
பிரீமியம் ஸ்டோரி
கிராபியென் ப்ளாக்Follow
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் `நந்தலாலா', `முகமூடி' உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் கிராபியென் ப்ளாக்.
மாற்று சினிமா', `திரைப்படக்கல்லூரி ஆளுமைகள்', யதார்த்த சினிமாவின் முகம்', `தமிழ் சினிமா கலையாத கனவுகள்', `உலக சினிமா கதை பழகும் கலை' (பதிப்பில்) உள்ளிட்ட கட்டுரைத் தொகுதிகளை எழுதியுள்ளவர். இவரது மாற்று சினிமா' நூல் பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆனதோடு, சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகங்களில் பி.எச்.டி. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியின் மரணம் இன்னும் சில நிமிடங்களில்' (சிறுகதை), மாயப்பெருங்கூதன்' (நாவல்) உள்ளிட்ட படைப்புகளையும் அண்மையில் எழுதியுள்ளார்.
சென்னை மய்ய தொழில்நுட்பக் கல்லூரியில் `டிப்ளமோ கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்' பயின்றார். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் `பி.எஸ்.விஷுவல் கம்யூனிகேஷன்' பட்டப் படிப்பை முடித்தவர். பிரசாத் ஃபிலிம் அகாடமியில் `டிப்ளமோ இன் வீடியோகிராபி' பயின்றுள்ளார்.
பத்து வருடங்களுக்கு மேலாகச் சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி என தொடர்ந்து பணியாற்றியும் வருபவர். `தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - சினிமா எக்ஸ்பிரஸ்' இதழின் உதவி ஆசிரியராகடவும், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட்- சன் நியூஸில்' உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். `அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி' நிறுவனத்திலிருந்து வெளியான `மனம்' இணைய இதழின் தலைமை நிருபராகவும் பணிபுரிந்தவர். தற்போது `ஆனந்த விகடன்' குழுமத்தில் `லைப்ஸ்டைல்' தீமில் உதவி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.