சிலருக்கு, அதிகமாகச் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அதனால் உடல் பருமன், செரிமானக் கோளாறு, ஊட்டச்சத்துக் குறைபாடு எனப் பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். இவர்கள், உணவின் அளவைக் குறைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளைத் தருகிறார் டயட்டீஷியன் அஸ்மா பிரவீன்.

ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் 100 முதல் 200 மி.லி தண்ணீர் அருந்த வேண்டும். இதனால், உடல் வறட்சி தடுக்கப்படும். பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். எத்தகைய சூழல் பசி உணர்வைத் தூண்டுகிறது என்பதைக் கண்டறிந்து, அதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

வெவ்வேறு நிறம்கொண்ட காய்கறிகள், பழங்களை தினமும் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு, மூன்று முதல் நான்கு நிறங்கள்கொண்ட காய்கறிகளைச் சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பசி உணர்வைக் குறைக்கும். காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிட்டால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.

உணவின் அளவைச் சிறிது சிறிதாகப் பிரித்து, ஐந்து முதல் ஆறு தடவை சாப்பிடலாம். அப்படிப் பிரித்துச் சாப்பிடும் உணவில், நட்ஸ், கடலைமிட்டாய் எனப் புரதம் நிறைந்த ஆரோக்கியமான ‘ஸ்நாக்ஸ்’ இடம்பெறுவது சிறப்பு.

தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதை எழுதிவையுங்கள். உணவின் அளவையும் சாப்பிடும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ளுங்கள். உணவின் அளவைக் குறைக்க, சிறிய தட்டில் சாப்பிடலாம்.

சாப்பிடும்போது உணவின் மீது மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டி.வி., ஸ்மார்ட்போன், லேப்டாப் என எந்த டிஜிட்டல் திரையையும் பார்க்கக் கூடாது. சாப்பாட்டின் நடுவே வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டால், யோசிக்காமல் நிறுத்திவிடுங்கள்.

ஜெ.நிவேதா