Published:Updated:

ஃப்ரீஸ்டைல் டான்ஸ், டயட், டிரஸ்ஸிங் - `மிஸ் இந்தியா’ போட்டிக்குத் தயாராகும் ரூபியா

ஃப்ரீஸ்டைல் டான்ஸ், டயட், டிரஸ்ஸிங் - `மிஸ் இந்தியா’ போட்டிக்குத் தயாராகும் ரூபியா
ஃப்ரீஸ்டைல் டான்ஸ், டயட், டிரஸ்ஸிங் - `மிஸ் இந்தியா’ போட்டிக்குத் தயாராகும் ரூபியா

உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவின் சார்பாக பங்கெடுக்கப் போகும் அழகியைத் தேர்வு செய்யும் நிகழ்வான  `மிஸ் இந்தியா - 2019' போட்டி ஜூன் மாதம் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட 30 அழகிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு சார்பாக பங்கெடுக்க உள்ள ரூபியாவிடம் பேசினேன்.

`மிஸ் இந்தியா' பட்டத்துக்கான போட்டி ஜூன் மாதம் எனத் தகவல் வெளியிட்டுள்ளனர். மிஸ் இந்தியா அழகிப்போட்டியானது சுமார் ஒரு மாத காலம் நடைபெறும். அந்த ஒரு மாதத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட சப்-டைட்டில் போட்டிகள் நடைபெறும். அதற்கு என்னைத் தயார்படுத்தி வருகிறேன். `மிஸ் டேலண்ட்' என்ற சப் டைட்டில் போட்டி கொஞ்சம் கடினமாக இருக்கும். பெரும்பாலும் தமிழ்நாடு சார்பாகப் பங்கெடுப்பவர்கள் இந்தச்சுற்றில் நம் பாரம்பர்ய நடனமான பரதத்தைதான் தேர்வு செய்வார்கள். ஆனால், நான் ஃப்ரீ ஸ்டைல் டான்ஸை தேர்வு செய்து, என் திறமையை வெளிப்படுத்த உள்ளேன். `மிஸ் ப்யூட்டி ஃபுல் பாடி பட்டம் வெல்வதும்' என் கனவு.

அதற்காக இப்போதிலிருந்தே டயட், உடற்பயிற்சிகள் போன்றவற்றைத் தொடங்கியுள்ளேன். இந்த முப்பது நாளுக்குப் பின் `மிஸ் இந்தியா" டைட்டிலுக்காக ரேம்ப் வாக், கேள்வி - பதில் சுற்று போன்றவை இருக்கும். கேள்வி - பதில் சுற்றைப் பொறுத்தவரை நம்முடைய பிரசென்ஸ் ஆப் மைண்ட்தான் சோதிப்பார்கள் என்றாலும் அதற்கும் பயிற்சிகள் எடுத்து வருகிறேன். நிச்சயம் `மிஸ் இந்தியா"பட்டம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.