`என்னவளே... அடி என்னவளே...’ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாடகர் உன்னிகிருஷ்ணனுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்பிருந்தே கர்னாடக இசையில் தனி முத்திரை பதித்துவந்தவர் இவர். இவருடைய இனிமையான குரல் வளமும் பாடல் வரிகளை உச்சரிக்கும்விதமும் கேட்பவர்களை மெய்ம்மறக்கச் செய்துவிடும். பலருக்கு இவரின் பாடல்கள்தாம் ‘ஸ்ட்ரெஸ் பஸ்டர்.’ உன்னிகிருஷ்ணனுக்கு மன அழுத்தம் வந்தால் எப்படி எதிர்கொள்வார்?

``நான் எப்பவுமே மனசை ரொம்ப கூலாவெச்சிருப்பேன். ஒரு தடவை சென்னை காமராஜர் அரங்கத்துல, ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியில என்னோட கச்சேரி. நான், மிருதங்கம், கடம் வாசிக்கிறவங்க எல்லாரும் வந்துட்டோம். வயலினிஸ்ட் வரலை. போன் பண்ணினா ‘ஸ்விட்ச் ஆஃப்’னு வந்தது. வேற ஒரு கச்சேரிக்கு அவர் போயிட்டார்னு புரிஞ்சுது.

அவரால எனக்கு மட்டுமில்லை. நிகழ்ச்சி நடத்துறவங்க, விளம்பரதாரர்கள்னு எல்லோருக்குமே பிரச்னை. நேரம் ஆக ஆக ஆடியன்ஸ் பக்கம் சலசலப்பு. இன்னொரு வயலினிஸ்டுக்கு போன் பண்ணினேன். அவர் அப்போதான் ஒரு கச்சேரியை முடிச்சிட்டு வந்திருந்தார். ‘டிரெஸ்ஸைக்கூட மாத்த வேண்டாம், அப்படியே புறப்பட்டு வாங்க’னு சொன்னேன். மறு பேச்சுப் பேசாம கிளம்பி பதினஞ்சு நிமிஷத்துல வந்துட்டார். கச்சேரி நல்லவிதமா முடிஞ்சுது. பொதுவா நான் எந்தச் சூழ்நிலையிலயும் பதற்றப்பட மாட்டேன். அதை நாம பொறுமையா கையாளணும். இல்லைன்னா, பிரச்னை மேலும் அதிகமாகும். நிறைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாம நாம தடுமாறுறதுக்குக் காரணம். ஸ்ட்ரெஸ். இதைத் தூக்கியெறிஞ்சுட்டாலே பாதி பிரச்னை காணாமப் போயிடும். இன்னொரு முக்கியமான விஷயம், நம்ம மனப்பான்மை (Attitude). `ஐயோ, இப்படி ஆகிடுச்சே’னு வருத்தப்பட மாட்டேன். எதையும் ஈஸியா எடுத்துக்கிற பழக்கம் எனக்கு உண்டு. முடிஞ்சவரைக்கும் பிரச்னையை நானே தீர்க்கப் பார்ப்பேன். எல்லாத்தையும் வீட்டில் இருக்கிறவங்ககிட்ட சொல்ல மாட்டேன். நம்மால அவங்களும் டென்ஷனாகிடுவாங்க.

மனசையும் உடம்பையும் நல்லவிதமா வெச்சுக்க வேண்டியது அவசியம். எனக்கு ஸ்போர்ட்ஸ்தான் பெரிய மைண்ட் ரிலீஃப். கிரிக்கெட் விளையாடுவேன். பல வருஷமா சென்னை கிரிக்கெட் கிளப்ல நான் மெம்பர். இப்போ டென்னிஸ், பாட்மின்டன் விளையாடுறேன். கிரவுண்டுல கொஞ்ச நேரம் விளையாடினாலே மனசு லேசாகிடும்.

இந்த உலகத்துலேயே மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் இசை. தம்புராவுல ஸ்ருதி கூட்டும்போதே மனசு மலர்ந்துடும். ஹிந்துஸ்தானி, கஸல், ஃபோக்னு எதையும் மிச்சம் வைக்காமக் கேப்பேன். சின்ன வயசுலருந்தே யேசுதாஸ், எஸ்.பி.பி., பி.பி.ஸ்ரீனிவாஸ், ஹரிஹரன் பாடல்கள் பிடிக்கும். ரொம்பவும் ஸ்ட்ரெஸ்ஸா இருந்தா, என் மனைவியின் வயநாடு எஸ்டேட்டுக்குப் போய் நாலு நாள் தங்கிட்டு வருவோம். இயற்கையான அந்தச் சூழல் மனசை உற்சாகப்படுத்திடும்.’’

எஸ்.கதிரேசன்