Published:Updated:

``பெண் தற்கொலைக்கு தைராய்டு காரணமாக இருக்க முடியாது!''- டாக்டர் ஜெயஶ்ரீ விளக்கம்

``பெண் தற்கொலைக்கு தைராய்டு காரணமாக இருக்க முடியாது!''- டாக்டர் ஜெயஶ்ரீ விளக்கம்
``பெண் தற்கொலைக்கு தைராய்டு காரணமாக இருக்க முடியாது!''- டாக்டர் ஜெயஶ்ரீ விளக்கம்

குழந்தைக்கு தாய்ப்பால் தர முடியாத வேதனையால், இளம் தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்த இளம் தாய்க்கு தைராய்டு இருந்ததால்தான் தாய்ப்பால் தர முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததாகவும், அதனால்தான் தற்கொலை முடிவுக்குச் சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது. தைராய்டு பிரச்னை இருந்தால், தாய்ப்பால் சுரப்பதில் பிரச்னை வருமா என்று மகப்பேறு மருத்துவர் ஜெயஶ்ரீ கஜராஜிடம் கேட்டோம். 

``தைராய்டு சுரப்புக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தாய்ப்பால் சுரப்புக் குறைபாடு உள்ள ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போதே, அவருக்கு தைராய்டு பிரச்னை இருந்தால் அதற்கான மெடிசனை கொடுத்து தாய் - சேய் இருவரையுமே பாதுகாத்து விடுவோம்.

சில பெண்களுக்கு குழந்தைப் பிறந்த பிறகு தைராய்டு வரலாம். அது தானாகவே சரியாகி விடும். அந்த இளம் தாய், குழந்தைப் பிறந்த பிறகு வருகிற போஸ்ட்பார்ட்டம் ப்ளூ பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதை வீட்டில் இருப்பவர்கள் சரியாக கவனிக்காமல் விட்டிருக்கலாம். தவிர, வேறு ஏதேனும் மன உளைச்சல்கூட இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவை நாடியிருக்கலாம்  என்பதுதான் என்னுடைய கருத்து'' என்றார் டாக்டர் ஜெயஶ்ரீ