Election bannerElection banner
Published:Updated:

விமானப்போக்குவரத்தில் சவுதி அரேபியாவுக்குக் கூடுதல் சலுகை - தாராளம் காட்டும் இந்தியா!

இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் அமெரிக்க எதிர்ப்பு காரணமாக சவுதி அரேபியாவிடம் கூடுதல் சப்ளையை எதிர்நோக்கும் சூழலில் இந்தியா உள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்காகவும் சவுதி அரேபியாவுடன் இந்திய அரசு கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறது. கடந்த மாதத்தில் இந்தியா வருகை தந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பயங்கரவாத எதிர்ப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி, கூட்டு ராணுவப்பயிற்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த நட்புறவின் எதிரொலியாக, தற்போது சவுதி அரேபியா - இந்தியா இடையேயான விமானப் போக்குவரத்துக்கான உரிமையை இந்தியா 40% உயர்த்தியுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கிடைப்பட்ட போக்குவரத்தில் வாரத்திற்கு 28,000 விமானப்பயணிகள் பயனடையக்கூடும். இந்தச் சலுகை, வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். இதேபோல், இந்தியாவின் உள்கட்டமைப்புத்துறையில் 100 பில்லியன் டாலரை முதலீடு செய்யப்போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. 

புதிய வான்வழிப்போக்குவரத்துக் கொள்கைப்படி, 5,000 கிலோமீட்டர் தொலைவுக்குட்பட்ட நாடுகளில், சவுதிக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த விமானப் போக்குவரத்து உரிமைக்காக விண்ணப்பித்த சீனா, சிங்கப்பூர், கத்தார், மலேசியா போன்ற நாடுகளின் விண்ணப்பங்களை இந்தியா நிராகரித்துவிட்டது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு