Published:Updated:

விடுப்பில் சென்றார் டிஜிபி லத்திகா சரண்!

சென்னை, மார்ச் 24, 2011

தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண் இன்று முதல் மே 14 ஆம் தேதி வரை விடுப்பில் செல்கிறார். அவரது விடுப்புக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ##~~##

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைக் கவனிக்க இன்று மாலை போலோநாத் பொறுப்பேற்கிறார்.

கடந்த மாநகராட்சித் தேர்தல் நேரத்தில், லத்திகாசரண் பொறுப்பில் இருந்தபோது முறைகேடுகள் அதிகம் நடைபெற்றதாகவும், அவரை மாற்ற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டன.

அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைக் கவனிக்க போலோநாத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது.

அதேநேரத்தில், சட்டம் ஒழுங்கு பொறுப்புகளை லத்திகா சரண் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவரது விடுப்புக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. அவருக்கு பதிலாக தேர்தல் பணிகளை கவனிக்க போலோநாத் இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு