Published:Updated:

`கவாஜாவின் முதல் சதம்; ஓப்பனிங் பாட்னர்ஷிப் 193 ரன்கள்!’ - இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு #INDvAUS

`கவாஜாவின் முதல் சதம்; ஓப்பனிங் பாட்னர்ஷிப் 193 ரன்கள்!’ - இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு #INDvAUS
`கவாஜாவின் முதல் சதம்; ஓப்பனிங் பாட்னர்ஷிப் 193 ரன்கள்!’ - இந்தியாவுக்கு 314 ரன்கள் இலக்கு #INDvAUS

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. 

Photo Credit: BCCI

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை ஆரோன் ஃபின்ச் - உஸ்மான் கவாஜா தொடங்கினர். பும்ராவின் இரண்டாவது ஓவரில் எல்.பி.டபிள்யூ
கண்டத்திலிருந்து தப்பித்த ஃபின்ச் நிதானமாக விளையாடினார். கடந்த 20 போட்டிகளில் அவர் இரண்டு முறை மட்டுமே 40 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளதால் அவர்மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. உலகக் கோப்பை போட்டியிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய ரசிகர்கள் குமுறி வருகின்றனர். 

Photo Credit: Cricket Australia

இந்த அழுத்தத்தின் காரணமாக ஃபின்ச் இந்திய பந்துவீச்சாளர்களை கவனமாக எதிர்க்கொண்டார். பும்ராவின் தாக்குதல் காரணமாக கவாஜா - ஃபின்ச் இருவரும் நிதானமாக விளையாடினர். ஜடேஜா வீசிய 6-வது ஓவரில் கவாஜா (17 ரன்கள் எடுத்திருந்தார்) ரிவஸ் ஸ்வீப் செய்து ரன் எடுக்க முயன்றார். ஆனால், பந்து பேட்டின் மிடிலில் பட்டு எழும்பியது. தவான் இந்த கேட்ச் வாய்ப்பை வீணடித்தார். அப்போது
இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறோம் என இந்திய வீரர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். முதல் 10-ஓவரில் விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா அணி 52 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா வீரர்கள் வேகமெடுத்தனர்.

தோனியைக் கோபமடையச் செய்த அம்பயர் 

15-வது ஓவரை வீசிய கேதர் ஜாதவின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஃபின்ச். இதற்கு அடுத்த பந்தை அவர் வைடாக வீசினார். இதற்கு அடுத்த பந்து ஃபின்சின் கைகளில் பட்டு கீப்பரிடம் தஞ்சம் அடைந்தது. இந்தப் பந்துக்கும் அம்பயர் வைடு கொடுத்தார். தோனி - ஜாதவ் இருவரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். டிவி- ரீப்ளேவிலும் இது தொடர்ந்து ஒளிபரப்பட்டது.  இதன்பின்னர்
சிக்ஸரும் - பவுண்டரியுமாக விளாசித்தொடங்கினர். முதல் 10 ஒவர்களில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி இதற்கு அடுத்து அதிரடியில் களமிறங்கியது. கோலி 6 பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தியும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக கேதர் ஜாதவின் பந்துகளை குறிவைத்து தாக்கினர். இவரது பந்திவீச்சில் தான் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அதிகம் பறந்தது. 30
ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 186 ரன்கள் எடுத்திருந்தது.

Photo Credit: cricket.com.au

கேப்டன் ஆரோன் ஃபின்ச் - கவாஜா இருவரும் அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரிந்தார். 32-வது ஓவரில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆரோன் ஃபின்ச் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். இந்த முறை ஃபின்ச் அப்பீல் செய்தும் அது அவருக்கு எதிராக அமைந்தது. இவர் 99 பந்துகளில் 93 ரன்களை எடுத்திருந்தார். அப்போது ஆஸ்திரேலியா அணி 31.5
பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து மேக்ஸ் வெல் களமிறங்கினார். இவரும் கவாஜாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். மேக்ஸ்வெல் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியில் களமிறங்கினர். ஜடேஜா ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியுமாக பறக்க விட்டார். இதற்கிடையில் உஸ்மான கவாஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு
செய்தார். இந்திய பந்துவீச்சாளர்களை மிரட்டிக்கொண்டிருந்த கவாஜா 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

மேக்ஸ்வெல் தொடர்ந்து அதிரடியில் மிரட்டினார். இவரை ஜடேஜா ரன் அவுட் மூலம் வெளியேற்றினார். குல்தீப் யாதவ் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பு கட்டுக்குள் வந்தது. ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.