Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர்

வலைபாயுதே

சைபர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/Giri47436512

2k கிட்ஸ் எல்லாம் பைக் வாங்கி காதலியை உட்கார வச்சு ஊர் சுத்திகினு இருக்காங்க.. 90ஸ் கிட்ஸ் இன்னமும் அந்த பைக்ல லைட் எரியுதுன்னு சொல்லிகிட்டுத் திரியறாங்க... அநியாயம்டா!

twitter.com/harbhajan_singh

என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ப்ச்! மீண்டு வா நேசா! 

twitter.com/vignesh_viki1

நேசமணியின் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று இந்த எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும் #Pray_for_Neasamani 

வலைபாயுதே

twitter.com/manipmp 

சண்டையில சவால் விடத் துணிவில்லாத போது சாபம் விட்டுவிடுவது புத்திசாலித்தனம்.
 
twitter.com/udaya_Jisnu


காதலென்பது இளையராஜாவின் இசை; திருமணமென்பது இளையராஜாவின் பேட்டி..

twitter.com/ItsJokker 


ஆண்டவன் ஆண்களுக்கு மாமியார் கொடுமையைக் கொடுப்பதில்லை, பதிலாக மேனேஜரைக் கொடுத்து விடுகின்றான். 

twitter.com/PEETER_MAMA

நாற்பது வருசமா பாம்பேல இருந்த வேலு நாயக்கரே ஹிந்தி கத்துக்காம ட்ரான்ஸ்லேசனுக்கு ஒரு ஐயர வச்சிதான் காலம் தள்ளினார். அது மாதிரி தள்ளிட்டுப் போறோம்.
 
twitter.com/smhrkalifa 


இன்று மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ரகசியமாக ராணுவ விமானத்தில் காண்ட்ராக்டர் நேசமணியை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல மோடி அதிரடி உத்தரவு.  #Pray_for_Neasamani  

வலைபாயுதே

twitter.com/apssara2013

இந்தி தெரிந்தால் மட்டுமே ஒருவன் பிழைக்க முடியுமென சௌகார்பேட் சேட்டுகிட்ட வந்து சொல்லிப்பாரு, போடா பேமானி என்று சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் திட்டுவார். #StopHindiImposition 

twitter.com/Megna_almoner

தமிழ், ஆங்கிலம் மொழி தவிர தமிழ்நாட்டில் தேவைப்படும் முக்கிய மொழி C, C++, Java, Python,Oracle இவைதான்... 

twitter.com/Thaadikkaran

இப்பெல்லாம் வர்ற படத்தைவிட டிரெய்லரும் டீசரும்தான் நல்லா இருக்கு..! 

facebook.com/jayreborn

நாம எது சொன்னாலும் அதற்கு மிகச்சரியா நேரெதிரா செய்யும் சிலர்...

1) மனைவி / Girlfriend

2) மத்திய அரசு

3) சலூன் கடைக்காரர்

facebook.com/விக்னேஷ் சி செல்வராஜ்


இதற்கு ஒரு வழியிருக்கிறது. இராணுவத்திற்கு ஒதுக்கப்படுவதற்கு நிகரான நிதியை ஆண்டு பட்ஜெட்டுகளில் இளையராஜாவுக்கு ஒதுக்கிவிட்டு அவர்தம் இசையை நாட்டுடைமை ஆக்குவது. அரசே, பரிசீலி!

வலைபாயுதே

facebook.com/Aadhavan Dheetchanya

உஸ்... உஸ்...

நீ எந்த ஊரு உஸ்...

நீ என்ன சாதி உஸ்...

இத்துடன் செய்தியாளர் சந்திப்பு நிறைவு பெற்றது உஸ்.

facebook.com/Mohan Reuban

எழுத்தாளர்கள் எம்.பி ஆகிறார்கள். பதிலுக்கு எம்.பி-க்கள் யாவரும் எழுத்தாளர்கள் ஆனால் என்னவாகும்? அட ஆண்டவா!

 - சைபர் ஸ்பைடர்