Published:Updated:

புதிய பத்து ரூபாய் நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

சென்னை, மார்ச் 24, 2011

இந்திய ரிசர்வ் வங்கியின் பவளவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், புதிய பத்து ரூபாய் நாணயங்கள் விரைவில் வெளியிடுகிறது. ##~~##

இருவகை உலோகங்களால் தயாரிக்கப்பட்ட 27 மி.மீ. விட்டமுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வரவுள்ளன என்று ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் ஜி.பி. போரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

நாணயத்தின் முன்புறம் அசோக தூணின் சிங்க முகமும், அதற்கு கீழ் சத்தியமேவ ஜெயதே என்ற வாசகம் ஹிந்தியில் பொறிக்கப்பட்டு இருக்கும்.

பாரத் என்று இடப்பக்கத்தின் மேற்புறத்திலும், இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.  சிங்க முகத்தின் கீழ் பத்து ரூபாய் என்ற எண் பொறிக்கப்பட்டு இருக்கும்.

இதேபோல நாணயத்தின் பின்புறத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னமான பனைமரமும், புலிப்படமும் பொறிக்கப்பட்டிருக்கும். இதற்கு கீழே பவளவிழா என்பது பிளாட்டினம் ஜூப்ளி என்று ஆங்கிலத்தில் 1935-2010 என்று குறிப்பிடப்பட்டு நாணயம் வெளியிடப்படும்.

இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
 

அடுத்த கட்டுரைக்கு