பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தெறிக்க விடறாங்களே!

தெறிக்க விடறாங்களே!
News
தெறிக்க விடறாங்களே!

தெறிக்க விடறாங்களே!

தெறிக்க விடறாங்களே!

ழைமையின் முக்கியத்துவத்தை​ச் சொன்ன இந்த வார ‘சோறு முக்கியம் பாஸ்’ செம ருசி.
-ஜெர்லின், ஆலந்தூர்.

ளர்ச்சித் திட்டம் எதுவாக இருப்பினும் அதன் நோக்கத்தை மக்களுக்கு விளக்கி, ஏற்கச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தலையங்கம் சூப்பர்!
-மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

விகடனின் தனித்தன்மை சினிமா விமர்சனத்திற்கு என்.ஜி.கே விமர்சனம் தரமான உதாரணம். வெல்டன் விகடன்.
பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்.

ழுபறியில் இருக்கும் படங்கள் குறித்த கட்டுரை சொல்லும் விஷயங்கள் வேதனை தருகின்றன. பிரச்னைகள் தீர்ந்து நல்ல படைப்புகளை அந்தப் படைப்பாளிகள் தொடர்ந்து தரவேண்டும் என்பதே என் போன்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
-மல்லிகா அன்பழகன், கே.கே.நகர், சென்னை.
  
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் ‘ஜெஸ்ஸி’ சிறுகதை மிக மிக ரொமான்டிக்கான நடையில் எழுதப்பட்டிருந்தது. படித்துமுடித்ததும் ஞாபகங்களைக் கிளறுகிற ஒரு படைப்பு!
-ப.மூர்த்தி, பெங்களூரு.

சுப்பிரமணிய சிவா பேட்டியைப் படித்தபிறகு ‘வெள்ளை யானை எப்ப வரும்’ என்று எதிர்பார்ப்பு எகிறுகிறது!
-சி.கார்த்திகேயன், சாத்தூர்.

சூரியராஜின் ‘அறிவுஜீவி ஆவது எப்படி’ காமெடி கட்டுரையாக இருந்தாலும் சீரியஸாக அவற்றை முயற்சி செய்தால் இன்டலெக்சுவல் பட்டம் நிச்சயம் கிடைக்கும்!
- எஸ்.வி.எஸ். மணியன், கோவை.

வாசகர் மேடை என்ற ஐடியாவில் கேள்விகள் பட்டையக் கெளப்புதுன்னா பதில்கள்ல வாசகர்கள் தெறிக்க விடறாங்களே!
-மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

வா
வ்... என் அபிமான அறிவிப்பாளர் அப்துல் ஹமீது பேட்டிக்கு நன்றி விகடனாரே... அவருடைய பதில்களை அவர் குரலிலேயே படித்து ரசித்தேன்!
-ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.