பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

twitter.com/pachaiperumal23
சனிக்கிழமை சாயந்தரம் ஆயிட்டாலே, ‘நாளைக்குக் கோழி வாங்கலாமா, கறி எடுக்கலாமா’ன்னு தோணுதே தவிர, ‘வீட்டை ஒதுங்க வைப்போம், துணியைத் தொவச்சுப் போடுவோம்’னு தோணவே மாட்டேங்குது. 

வலைபாயுதே

twitter.com/parveenyunus
“இந்தி தெரியாமல் டெல்லியில் நான் கஷ்டப்பட்டேன்” - பொன்னார். அதான், இந்த முறை உங்களுக்கு அந்தக் கஷ்டத்தையே கொடுக்கலை கன்னியாகுமரி மக்கள்..! 

twitter.com/HAJAMYDEENNKS

ஸ்கூல் ஃபீஸ் நினைச்சுக் கவலைப்படுவாங்க. ஆனால், அரசுப் பள்ளிகளை  அலட்சியப்படுத்துவாங்க. இந்தப் பெற்றோர்களே இப்படித்தான்.  

twitter.com/ItsJokker
எல்லாப் பெண்களையும் ஒருத்தன் ரசிக்குறான்னா,  ஒண்ணு கலைஞனா இருப்பான், இல்லை, கல்யாண வயசின் கடைசி நிலையில இருக்கிறவனா இருப்பான்..! 

twitter.com/nandhu_twitts

நேரம் கிடைக்கும்போதெல்லாம் கிடைக்காதவற்றை நினைத்துக் கவலைப்படக் கூடாது! 

வலைபாயுதே

twitter.com/JamesStanly
இந்தி கத்துக்கிட்டா நாட்டுக்கு நல்லதாம்.

யாரு சொன்னா?

ஜமக்காளம் விக்கிறவங்க பேசிக்கிட்டாங்க.

twitter.com/shivaas_twitz

நம்மை IRCTC புக்கிங் ஏஜென்ட்டாகவே பயன்படுத்தும் சொந்தங்கள். 

twitter.com/shivaas_twitz 
டிவியில வர்ற எண்ணெய் விளம்பரத்தைப் பார்த்துட்டு, பூரி சாப்பிடணும்போல இருக்குன்னு சொன்னேன்...

உடனே நாலு பூரி போட்டாங்க. ‘கல்யாண மாலை’ நிகழ்ச்சி பார்த்துட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணணும்போல இருக்குன்னு சொன்னேன். பூரிக்கட்டையாலே நாலு போட்டாங்க. 

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar 
ஒரு நடுத்தர வயது ஆணின் வண்டியின் வேகம், அவன் சுமக்கும் குடும்ப பாரத்தைப் பொறுத்தே அமைகிறது! 

twitter.com/Jino_Offl
பலமிருக்கு என்பதற்காக எதிரிகளைச் சம்பாதிக்கக் கூடாது.

twitter.com/TazTaizo4885
ஒரு மாசமா, பகல் நேரத்துல பச்சத்தண்ணிகூடக் குடிக்காம நீங்க பட்ட கஷ்டத்தை நினைச்சாலே பாய்... கொஞ்சம் பொறுப்பா, பிரியாணி இன்னும் ரெடியாகலை..! 

twitter.com/mohanramko
இந்த ஜீன்ஸ் பேன்ட்டைத் துவைக்கறதுக்குள்ள உயிர் போயிடிச்சி... ஆனா அழுக்கு போகல... 

twitter.com/shivaas_twitz
”என்ன ப்ரோ, உங்க பாத்ரூம்ல பைப் சரியா மூடலையா?  தண்ணி சொட்டிக்கிட்டு இருக்கு... இதனால எவ்ளோ தண்ணி வேஸ்ட் ஆகும் தெரியுமா?”

வலைபாயுதே

நாளைக்குக் குளிக்க பைப்பைத் திறந்து விட்டு தண்ணி புடிச்சுக்கிட்டு இருக்கேன்னு அவனுக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன்..?!

twitter.com/TalksssTweet
ஒரு செருப்பு மட்டும் காணோம்னா கண்டிப்பா நாய் எடுத்திருக்கும்.

ரெண்டு செருப்பும் காணோம்னா கண்டிப்பா எந்த நாயோதான் எடுத்திருக்கும். 

- சைபர் ஸ்பைடர்