Published:Updated:

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?
பிரீமியம் ஸ்டோரி
கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

Published:Updated:
கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?
பிரீமியம் ஸ்டோரி
கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

ருத்துவ சக்தி மிக்கது கண்வலிக் கிழங்கு என்பார்கள். ஆனால், அதை விளைவிக்கும் விவசாயிகள் நொந்து நூலாகிப் போயிருக்கிறார்கள். வெயில், மழை பாராமல் கண்வலிக்கிழங்கு விதைகளை உருவாக்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட இடைத்தரகர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இவர்களிடம் சிக்கிக்கொண்டு, விளைவித்த விதைகளை விற்க முடியாமல் மீளாத சோகத்திலிருக் கிறார்கள் கண்வலிக்கிழங்கு விவசாயிகள். என்னதான் நடக்கிறது?

திண்டுக்கல், கரூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் கண்வலிக்கிழங்கு என்ற செங்காந்தள் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் விதை மருத்துவப் பயன்பாடு மிக்கது. அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன இந்த விதைகள். இந்தியாவிலிருந்து கண்வலிக்கிழங்கு விதைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் நான்கு மட்டுமே இருக்கின்றன. டெல்லி, ஹரியானாவில் உள்ள அந்த நிறுவனங்கள், முகவர்கள் மூலம்  விவசாயிகளிடம் விதைகளை வாங்குகின்றன. இவர்களைத் தாண்டி உள்ளூர்ச் சந்தையில் விற்பனை செய்ய முடியாது. இதனால், இவர்கள் நிர்ணயிப்பதுதான் விலை.

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

சர்வதேச சந்தையில், ஒரு கிலோ விதை ஆறாயிரம் ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஆனால், விளைவிக்கும் விவசாயிகளுக்கு   2,000 ரூபாய்க்கு மேல் விலை கொடுக்க முடியாது என வியாபாரிகள் முரண்டு பிடிக்கிறார்கள். இதனால் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார்கள் விவசாயிகள். இது தொடர்பாக நம்மிடம் பேசிய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து, ‘‘தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் சுமார் ஐயாயிரம் ஏக்கருக்கு மேல் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இதைச் சாகுபடிசெய்ய செலவு மிகவும் அதிகம். விதைக் கிழங்கு ஒரு கிலோ 800 ரூபாய் என்பதால், ஒரு ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்குச் சராசரியாக 150 கிலோ விதை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ விதைக்கான உற்பத்தி செலவு 2,000 ரூபாய் ஆகிறது. அதற்கு அதிகமாக விலை கிடைத்தால்தான் விவசாயிகள் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும். இதனால், கடந்த ஆண்டு விவசாயிகளை ஒன்றுசேர்த்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம். அதனால் கிலோவுக்கு 3,500 ரூபாய் விலை கிடைத்தது. ஆனால், வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக, இந்த ஆண்டு இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்கிறார்கள். இதனால் அறுவடை செய்துவிட்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார்கள் விவசாயிகள். கடனை அடைப்பதற்காக வந்த விலைக்கு விதையை விற்பனை செய்துவருகிறார்கள். இதனால் அவர்கள் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். இந்த விதை முழுக்க வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி ஆகிறது. அதனால், ‘மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும்; விலையையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்’ என்று பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். இதுகுறித்து நான்கு மாவட்டங்களில் உள்ள எம்.பி-க்களிடம் பேசியிருக்கிறேன். அவர்களுடன் சென்று மத்திய வர்த்தக அமைச்சரைச் சந்திக்கப் போகிறோம். மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்தால்தான் கண்வலிக் கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் லாபம் பார்க்க முடியும்’’ என்றார்.

கண்ணீர் வடிக்கும் கண்வலிக்கிழங்கு விவசாயிகள்! - மத்திய அரசு தலையிடுமா?

ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த காமராஜ், ‘‘இந்த வருஷம் மழை இல்லை. கடுமையான வறட்சி. டேங்கர் லாரியில தண்ணிய வாங்கித்தான் செடிகளுக்குப் பாய்ச்சினோம். கூலியாள் சம்பளம், மருந்துச் செலவும் அதிகமாகிப் போச்சு. போன வருசம் ஒரு கிலோ விதை 3,500 ரூபாய்க்கு வித்துச்சு. அதுக்கு முதல் வருசம் 3,000 ரூபாய் வித்துச்சு. ஆனா, இந்த தடவை 2,000 ரூபாய்க்குக் கேட்குறாங்க. இந்த விலைக்கு வித்தா கடுமையான நட்டம் ஆகிடும். விதைய அரசு வாங்கணும். அதுக்கான கொள்முதல் நிலையம் அமைக்கணும். இது இந்தப் பகுதி விவசாயிகளோட நீண்டநாள் கோரிக்கை’’ என்றார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 800 முதல் ஆயிரம் டன் வரை கண்வலிக்கிழங்கு விதை பயிராகிறது. ஒரு கிலோவுக்கு 2,000 ரூபாய் வியாபாரிகள் அதிகம் வைத்து விற்பனை செய்வதாக வைத்துக்கொண்டாலும் 160 முதல் 200 கோடி ரூபாய். இது நான்கு வியாபாரிகளுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு விவசாயிகளுக்கும் லாபம்கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

- ஆர்.குமரேசன்,  படம்: நா.ராஜமுருகன்