Published:Updated:

டாப் 10 கார்கள்: பிப்ரவரியில் 2,68,843 கார்கள் விற்பனை!

டாப் 10 கார்கள்: பிப்ரவரியில் 2,68,843 கார்கள் விற்பனை!
டாப் 10 கார்கள்: பிப்ரவரியில் 2,68,843 கார்கள் விற்பனை!

ந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதியின்  செலெரியோ மாடலைப் பின்னுக்குத்தள்ளி டாட்டாவின் டியாகோ  மாடல் கார் முன்னிலைக்கு வந்துள்ளது. 

இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் கார் நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் 2,68,843 கார்கள் விற்பனையாகியுள்ளது. ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதத்தில் 8,140 கார்கள் குறைவாகத் விற்பனையாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் மாருதியின் செலெரியோ மாடலில் 9,217 கார்கள் விற்பனையாகின. ஆனால் பிப்ரவரியில் 3,631 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதாவது செலெரியோ மாடல் விற்பனையானது 60.61% குறைந்துள்ளது. ஆனால் வேகன்-ஆர் மாடலில் 55.86% விற்பனை அதிகரித்துள்ளது. ஜனவரியில் 10,048 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில் பிப்ரவரியில் 15,661 கார்கள் விற்பனையாகியுள்ளன. அதேபோல், ரெடி-கோ, கேப்ச்சர், ஹாரியர் போன்ற மாடல்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் தொடர்ந்து 6 இடங்களில் மாருதி முன்னிலையில் இருக்கிறது. 
ஜனவரியில் ஒன்பதாவது இடத்திலிருந்த மாருதியின் வேகன்-ஆர் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. டாப் 10 பட்டியலின் அடிப்படையில், பிப்ரவரியில் விற்பனையான கார்களில் அதிகபட்சமாக மாருதி ஆல்ட்டோ மாடலில் 24,751 கார்கள் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மாருதி ஸ்விஃப்ட் 18,224 கார்களும், மூன்றாவது இடத்தில் மாருதி பெலினோ 17,944 கார்களும், நான்காவது இடத்தில் மாருதி டிசையர் 15,915 கார்களும், ஐந்தாவது இடத்தில் மாருதி வேகன்-ஆர் 15,661 கார்களும், ஆறாவது இடத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 11,613 கார்களும், ஏழாவது இடத்தில் ஹூண்டாய்  எலீட் i20 11,547 கார்களும், 
எட்டாவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா 10,206 கார்களும், ஒன்பதாவது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் i10 9,065 கார்களும் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் பத்தாவது இடத்தில் இருந்த செலெரியோவைப் பின்னுக்குத்தள்ளி டாட்டா  டியாகோ 8,286 கார்களுடன் முன்னிலையில் உள்ளது. 

பிப்ரவரி மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் 6 இடங்களில் மாருதியும், 3 இடங்களில் ஹூண்டாயும், ஒரு இடத்தில் டாட்டாவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிப்ரவரி மாதம் விற்பனையான டாப் 10 கார்கள்!

மாடல் யூனிட்
மாருதி ஆல்ட்டோ 24,751
மாருதி ஸ்விஃப்ட் 18,224
மாருதி பெலினோ 17,944
மாருதி டிசையர்   15,915
மாருதி வேகன்-ஆர்  15,661
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 11,613
ஹூண்டாய்  எலீட் i20 11,547
ஹூண்டாய் க்ரெட்டா 10,206
ஹூண்டாய் கிராண்ட் i10 9,065
டாட்டா  டியாகோ 8,286