Published:Updated:

``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி!’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி!’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ
``எது சுயமரியாதையைத் தருகிறதோ அதுவே வெற்றி!’’ - திருநங்கை காயத்ரி... வீழ்வேனென நினைத்தாயோ

எங்களுடைய முகத்தைப் பார்த்தாலே பலருக்கும் வரும் அருவருப்பு உணர்வுக்குதான் இன்னும் எனக்கு அர்த்தம் புரியல” என்று சொல்லும் காயத்ரி, திருநங்கைகளைப் பற்றிய கூட்டு மனசாட்சிக்கு இன்னும் நிறைய கேள்விகளை வைத்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முந்தைய பாகங்கள்:

                                                                                 ``புறக்கணிப்புகளே என் கிரீடம்!'' - ரம்யா கிறிஸ்டினா

                                                                                வறுமையிலிருந்து திமிறி எழுந்த கல்வி அதிகாரி தங்கமணியின் கதை! 

``நடக்கும்போது, உட்காரும்போது, பேசும்போதுனு எப்பவும் அவமானங்களை சந்திச்சுக்கிட்டே இருக்கவேண்டிய கட்டாயம். எதிர்ல இருக்கிற அத்தனை பேரும் உங்களைப் பத்தியே கேவலமா நினைச்சுக்கிட்டு இருக்காங்கங்கிற நினைப்பே உங்களை முடக்க போதுமானதா இருக்கும் இல்லையா? டீச்சருங்க, கூடப் படிக்கிறவங்க, வீட்ல அம்மா, கூடப்பொறந்தவங்கன்னு எல்லாரும் என்ன ஒரே மாதிரிதான் அணுகுவாங்க. ரொம்ப மோசமா நடத்துறதை தாங்க முடியாம வீட்டைவிட்டு வந்தேன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார் திருநங்கை காயத்ரி.

ஆண்களையும் பெண்களையும்போல தன் பெயரை, தான் இன்னார் என்பதைச் சொல்லித் தொடங்காமல், கடந்துவந்த வலியை தனது அறிமுகக் குறிப்பில் பேசுகிறார் காயத்ரி. அப்பா இறந்து, தனி ஆளாய் நான்கு குழந்தைகளை வளர்க்கும் அம்மாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அரசுப் பணியில் அமரவேண்டும் என்றும் நிறைய அன்புக்கனவுகள் இருந்தன காயத்ரிக்கு. தன்னுடைய பாலின அடையாளத்தை அவர் உணரத் தொடங்கும்போதே ஏளனப் பார்வைகளாலும், மோசமான வார்த்தைகளாலும் துளைத்தெடுக்கப்பட்டவர், படிப்பை நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார். 

``எது என்னுடைய தப்புன்னு தெரியலை. படிக்கணும்னு நிறைய கனவும் திறமையும் இருந்தது. என்னுடைய அடையாளம் இதுன்னு தெரிஞ்சதுதான் பிரச்னை. இப்போ திருநங்கைகளைப் பத்தி, சில பேருக்கு இருக்கிற புரிதல்கூட நான் வீட்டைவிட்டு வந்தப்போ இல்லை. கோயம்பேடு மார்க்கெட்லேயே 15 நாள் தங்கினேன். நிறைய மோசமான பார்வை, மோசமான பேச்சு. இங்க திருநங்கைகள் கூட்டத்தோடு சேர்ந்து கடையில காசு வாங்கினேன். சாப்பிடவும் தங்கவும் காசு கெடச்சது. என் லட்சியம், மதிப்பை சம்பாதிக்கிறதுலதான் இருக்குன்னு உணர்ந்துட்டேன்” என்றார் காயத்ரி.

சொந்தத் தொழில்தான் செய்ய வேண்டும் என முயன்ற காயத்ரிக்கு, உதவியிருக்கிறார் தனியார் ஒப்பனை நிறுவன ஊழியர் மலர். மணப்பெண் அலங்காரம், ஒப்பனைத் தொழிலில் பயிற்சிபெற்ற காயத்ரி, இப்போது வீடுகளுக்குச் சென்று பியூட்டீஷியன் சேவைகளைத் தொடர்கிறார்.

ஃபேஸ்புக்கிலும் டிக்டாக்கிலும் தனது வேலையைப் பற்றி விவரிக்கும் காயத்ரி, இப்போது மிகவும் விரும்பப்படும் ஒப்பனைக் கலைஞர். ``வீடுகளுக்குப் போய் பியூட்டி சர்வீஸ் பண்ணணும்கிறது நானே தேர்ந்தெடுக்கலை. பெரிய பெரிய சலூன்ல என்னை மாதிரியானவங்க இருக்கிறதை நீங்க யாரும் இன்னும் ஏத்துக்கல. பெண்கள், ஆண்கள் குற்றவாளிகளா ஜெயிலுக்குப் போயிட்டு வந்தாலும்கூட, அவங்களுடைய மனமாற்றத்தையும் நல்ல நடத்தையையும் இந்தச் சமூகம் அங்கீகரிக்குது. எங்களுடைய முகத்தைப் பார்த்தாலே பலருக்கும் வரும் அருவருப்பு உணர்வுக்குத்தான் இன்னும் எனக்கு அர்த்தம் புரியலை” என்று சொல்லும் காயத்ரி, திருநங்கைகளைப் பற்றிய கூட்டு மனசாட்சிக்கு இன்னும் நிறைய கேள்விகளை வைத்திருக்கிறார்.

``ஹோம் சர்வீஸ், நடிகைகளுக்கு மேக்கப் மாதிரியான வேலைகளைச் செஞ்சுக்கிட்டே, திரைப்பட மேக்கப் யூனியன்ல சேர முயற்சி பண்ணிட்டிருக்கேன். யூனியன் கார்டு வாங்குறதுக்கான என்னுடைய முயற்சி நிச்சயமா ஜெயிக்கும்னு நம்புறேன். அதுக்கப்புறம் என் திருநங்கை சமூகத்துக்கும் இப்படியான பயிற்சிகளைத் தந்து அவங்களை சுயதொழில் முனைவோரா மாத்துறதுதான் என் வாழ்க்கையோட பலனா இருக்கும்னு நினைக்கிறேன்” என்னும் காயத்ரிக்கு, வாழ்க்கையைப் பற்றியும் வெற்றியைப் பற்றியும் இருக்கும் அளவீடுகள் வேறாக இருக்கின்றன. தென்னிந்திய திரைத் துறையில் திருநங்கை ஒப்பனைக் கலைஞராகும் முடிவில் உறுதியாக இருக்கும் காயத்ரியிடம், ``வெற்றினு எதை நினைக்கிறீங்க?” என்றேன்.

``சுயமரியாதையை எதெல்லாம் தருதோ, அதுதான் வெற்றி. அதுதான் மகிழ்ச்சியும்!'' என்கிறார் திருநங்கை காயத்ரி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு