Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

பிறந்து எட்டு மாதங்களாகும் என் மகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இனிப்பு, குளிர்பானம், வெங்காயம் உள்ளிட்ட உணவுகளை நான் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் மகளுக்கு ஜலதோஷம் பிடித்துக்கொள்கிறது. இதனால் அச்சமும் குழப்பமும் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னைக்கான தீர்வை அறிய விரும்புகிறேன்.

கன்சல்ட்டிங் ரூம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz- உஷா பிரதீபன், சென்னை 

கன்சல்ட்டிங் ரூம்

நீங்கள் சாப்பிடும் எந்த உணவும், அப்படியே நேரடியாகக் குழந்தைக்குச் செல்வதில்லை. உணவுகள் செரிமானமாகி, `தாய்ப்பால்’ என்ற உலகின் மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகத்தான் குழந்தைக்குச் செல்கிறது. எனவே, தாய்ப்பாலால் குழந்தைக்கு எந்த வகையிலும் ஊட்டச்சத்து சார்ந்த பாதிப்புகள் ஏற்படாது. ஒருவேளை நீங்கள் சாப்பிடும் சில உணவுகளால் குழந்தைக்கு ஜலதோஷம் பிடிக்கிறதென்றால், தாய்ப்பால் கொடுப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அப்படியும் பிரச்னை தொடர்ந்தால், குழந்தையுடன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் நீங்கள் ஆரோக்கியமான புரோட்டீன், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து வகை உணவுகளை இந்த வரிசையின்படி முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள். உங்கள் நலமும் குழந்தையின் நலமும் சிறப்பாக இருக்கும்.

நான் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. வயிறு முழுக்க ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருக்கின்றன. அரிப்பும் தாங்க முடியவில்லை. சீப்பைவைத்துச் சொறிந்துகொண்டிருக்கிறேன். வயிறெல்லாம் சிவந்துபோய், எரிச்சல் தாங்க முடியவில்லை. வயிற்றைச் சொறிந்துவிட்டு உடம்பில் வேறு எங்காவது கைவைத்தால், அங்கும் அரிக்கிறது. நான் என்ன செய்வது டாக்டர்?

- எஸ்.ஷீபா, சென்னை 

கன்சல்ட்டிங் ரூம்

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருக்குமிடத்தில் அரிப்பு இருப்பது சாதாரண விஷயம். அதற்காக விற்கப்படும் க்ரீமை, மருத்துவர் பரிந்துரையுடன் வாங்கித் தடவினாலே பிரச்னை சரியாகிவிடும். சீப்புவைத்தெல்லாம் சொறிந்தால் காயமாகிவிடும். உங்களுக்கு உடம்பெல்லாம் அரிக்கிறதென்றால், நீங்கள் சாப்பிட்ட ஏதோவொன்று ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம் அல்லது நீங்கள் அணிந்திருக்கும் துணியால்கூட ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். இவை தவிர, அளவில் பெரிதாகிவிட்ட கர்ப்பப்பையானது கல்லீரலின் மேல் அழுத்தம் கொடுத்திருக்கும். இதனால், வழக்கத்தைவிட கல்லீரல் நொதி, அதிகமாக வெளியேறும். இதனால்கூட உடலில் அரிப்பு ஏற்படும். உடனே உங்கள் மருத்துவரைப் பார்த்து, ‘லிவர் ஃபங்ஷனிங்’ பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். பொதுவாக இந்தப் பிரச்னை கர்ப்பமாக இருக்கும்போதுதான் ஏற்படும்; குழந்தை பிறந்ததும் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே டெலிவரி செய்ய வேண்டி வரலாம். என்றாலும், அச்சம் தேவையில்லை ஷீபா.

என் அக்கா கர்ப்பமாக இருந்தபோது, ஐந்தாவது மாதத்திலிருந்து உடல் முழுக்க வீங்கிவிட்டது. பிறகு திடீரென வடிந்துவிட்டது. பனிக்குடத்தில் நீர் குறைந்துவிட்டது என்று சிசேரியன் செய்தார்கள். இப்போது நான் இரண்டுமாத கர்ப்பிணி. அக்காபோல எனக்கும் நிகழ்ந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதற்கு வாய்ப்பிருக்கிறதா?

- ஆர்.கோமதி, சேலம் 

கன்சல்ட்டிங் ரூம்

குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால், மற்றவருக்கும் ஏற்படும் பிரச்னையல்ல இது. உடல் வீங்குவதற்கு, கர்ப்பகால ரத்த அழுத்தம், இத்தனை காலமாகத் தெரியாமல் இருந்துவந்த சிறிய அளவிலான இதயப் பிரச்னை, கிட்னி பிரச்னை என்று பல காரணங்கள் இருக்கின்றன. பனிக்குடத்தில் திடீரென நீர் குறைவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்த்தால், சிலருக்குப் பனிக்குடத்தின் மேற்பகுதியில் சிறு துளை இருக்கலாம். இதனால் பனிக்குட நீர் லேசாகக் கசிந்து வெளியேறலாம். கருவிலிருக்கும் சிசுவுக்குப் பிறவியிலேயே சிறுநீரகக் கோளாறு இருந்தாலும், பனிக்குடத்தில் நீர் குறையலாம். இன்னும் சிலருக்குக் காரணமே இல்லாமல், பனிக்குட நீர் கூடும் அல்லது குறையும். இது 20 சதவிகித கர்ப்பிணிகளுக்கு நிகழ்கிறது. ரெகுலர் செக்கப்புக்குச் செல்லும்போது, உங்கள் மருத்துவரே இவற்றையெல்லாம் கண்காணித்துக்கொள்வார். கவலை வேண்டாம்.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.