Published:Updated:

வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!

வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!

சஞ்சீவ் திவேதி, தலைவர் (விசாரணை), பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்இன்ஷூரன்ஸ்

வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!

சஞ்சீவ் திவேதி, தலைவர் (விசாரணை), பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்இன்ஷூரன்ஸ்

Published:Updated:
வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!
பிரீமியம் ஸ்டோரி
வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!

மோட்டார் வாகன விதிகளின்படி, எந்த வாகனத்தை வைத்திருந்தாலும் அதற்குக் காப்பீடு இருப்பது அவசியம். ஏனெனில், தொடர்ச்சியாக அதிகரித்துவரும் வாகன விபத்துகளை வைத்துப் பார்க்கும்போது, ‘காம்ப்ரிஹென்சிவ்’ (comprehensive) வகை மோட்டார் இன்ஷூரன்ஸ் பாலிசி இருப்பது நன்மை தரும். மேலும், வணிகரீதியில் பயன்படுத்தப் படும் வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், விபத்து  நடந்தால் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கும் இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். 

வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!

ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, இழப்பீட்டைப் பெறுவதற்கென்றே போலியாக ஜோடிக்கப் பட்ட க்ளெய்ம்கள் ஒருபுறத்தில் அதிகரித்துக்கொண்டே இருப்பதும் கவனத்துக்குரியது.

வாகனக் காப்பீட்டில் இழப்பீடு பெறுவதற்கான பணிகளை, பெரும்பாலும் அந்தந்தக் காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்வ தில்லை. வெளியிலிருந்து இதற்காகப் பணியமர்த்தப்படும் மூன்றாம் நபர்கள்தான் இதைச் செய்கிறார்கள். ஆனால், இவர்களால் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை பல நேரங்களில் பாதிக்கப்படுகிறது. ஏனெனில், வாகனப் பயன்பாட்டாளர்களைப் பொறுத்தவரை, இன்ஷூரன்ஸ் என்பது, வாகனத்தின் விலையில் சேர்க்கப்படும் தேவையில்லாத அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அதுகுறித்த பெரிய விழிப்புஉணர்வு இல்லாததால், அந்த அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்கும் கும்பல் இருக்கத்தான் செய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!இதைத் தவிர்க்கும் பொருட்டே இருசக்கர வாகனங்களில் ஐந்து ஆண்டுகளுக்கான மூன்றாம் நபருக்கான காப்பீடு மற்றும் கார்களில் மூன்று ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டது. இதனுடன் ‘ஓன் டேமேஜ் இன்ஷூரன்ஸ்’ மற்றும் தனிநபருக்கான விபத்துக் காப்பீடு ஆகியவை சேரும்போது, ஒவ்வொரு வாகனத்தின் பாலிசிக்கான பீரிமியம் தொகையானது கணிசமாக அதிகரித்துவிட்டது. ஆனால், குறைவான பிரீமியத்தில் பாலிசி எடுத்துத் தருகிறேன் என்று சொல்லி, ஆங்காங்கே மோசடி வேலைகள் நடப்பது வருத்தமளிக்கிறது.

வாகனங்களுக்கான மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற விஷயங்கள் நடப்பதற்கான சூழல் முன்பைவிட இன்னும் அதிகமாகியிருக்கிறது. மேற்கு வங்காளம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த மோசடிகள் குறித்த முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனக் காப்பீடு... போலிகள் ஜாக்கிரதை!

ஏற்கெனவே சொன்னதுபோல, ஒரு வாகனத்தின் மற்றுமோர் ஆவணமாகவே இன்ஷூரன்ஸ் பார்க்கப்படுவதால், அதைப்பற்றி வாகனப் பயன்பாட்டாளர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இதைப் பயன்படுத்தி, காலாவதியாகிவிட்ட இன்ஷூரன்ஸ் பாலிசியில் சில தகிடுதத்தம் செய்து, குறைவான  பிரீமியத்தில்  புதிய பாலிசியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவிடுகிறார்கள்.

இதனை  மண்டலப் போக்குவரத்து அலுவலகங் கள் (RTO) பெரிய அளவில் கேள்விகள் ஏதும் கேட்காமல் ஏற்றுக்கொண்டாலும்,  நெருக்கடியான நேரத்தில் வாகனத்தின் உரிமையாளருக்கு இதனால் எந்தவிதத்திலும் பிரயோஜனமாக இருக்காது.  ஒருவேளை, இதுபோன்ற மோட்டார் பாலிசி கொண்ட வாகனங்களால் உயிரிழப்பு/அதிக பொருள் சேதம் ஏற்படும்பட்சத்தில், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் செலவினங்களை நினைத்துப்பார்த்தாலே திக்கென இருக்கும். எனவே, இதில் சிக்காமல் இருக்க சில வழிமுறைகளைப் பின்பற்றுவோம்.

1. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுங்கள்

உங்கள் வாகனத்தின் காப்பீடு தொடர்பான விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள காப்பீடு நிறுவனத்தின் கிளை அலுவலகம் அல்லது வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்பு கொள்வது நல்லது. இல்லையெனில், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் உங்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியின் எண்ணைத் தந்து பரிசோதிக்கலாம்.

2. காப்பீட்டுக்கான ரசீது

நீங்கள் உங்கள் வாகனத்துக்கு எந்தவிதமான பாலிசி எடுத்திருந்தாலும், பீரிமியம் கட்டியதற்கான ரசீதைத் தவறாமல் பெறவேண்டும். அதில் பாலிசி தொடர்பான விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
 
3. க்யூ.ஆர் கோடு (QR Code)


இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் தற்போது க்யூ.ஆர் கோடுகளைப் பார்க்க முடிகிறது. இதனால் வாகனக் காப்பீட்டின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. இதற்கு உங்கள் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் க்யூ.ஆர் கோடு ரீடிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. நேரடியாக பாலிசியைப் பெறுங்கள் 

ஆன்லைன், பெட்ரோல் பங்க், சூப்பர் மார்க்கெட் எனப் பல இடங்களில் தற்போது மோட்டார் வாகன இன்ஷூரன்ஸ் கிடைக்கிறது. இதன் நம்பகத் தன்மையை உறுதிபடுத்திவிட்டு அந்த சேவையைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை காப்பீட்டாளரிடமிருந்து நேரடியாக பாலிசியைப் பெறுங்கள்.

5. பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை


வங்கிக் காசோலை, கிரெடிட் /டெபிட் கார்டு, வாலட் எனப் பல வழிகளில்  பிரீமியத் தொகையை நேரிலோ அல்லது ஆன்லைனிலோ செலுத்த முடியும்; சரியான தொகை சம்பந்தப் பட்டவர்களுக்குச் நேரடியாகச் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதைச் சோதித்தறியவும்.

வாகனத்தின் விலையுடன் ஒப்பிடும்போது, பாலிசி பிரீமியத் தொகை சொற்பமே; தவிர, பாதுகாப்புக்கு விலையே கிடையாது என்பதால், முறையான காப்பீட்டைப் பெறுவது அவசியம்.

தமிழில் : ராகுல் சிவகுரு 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism