பிரீமியம் ஸ்டோரி
நாணயம் பிட்ஸ்

சூப்பர் மார்க்கெட்டுகளில்  பெட்ரோல், டீசல்!

பெட்ரோல், டீசலை பெட்ரோல் நிலையங்கள் தவிர்த்து சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களில் விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனையில் இறங்கு வதற்காகவும் அதற்கான அடிப்படை உள்கட்டமைப்புக்காகவும் விதிமுறைகள் தளர்த்தப் படக்கூடும் என்று தெரிகிறது. 

#அப்படியே விலையையும் கொஞ்சம் குறைங்க பாஸ்!

நாணயம் பிட்ஸ்

போக்குக்காட்டிய நிறுவனம்... கடுப்பான சச்சின்!

சச்சின் டெண்டுல்கர், சிட்னியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் `ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ்’ (Spartan Sports) நிறுவனத்தின்மீது வழக்குத் தொடர்ந் திருக்கிறார். தன்னுடைய புகைப்படத்தைப்  பயன்படுத்தி தங்கள் நிறுவனத்தின் பொருளை விளம்பரப்படுத்துவதற்கு, இரண்டு ஆண்டுக்கான உரிமத்தைக் 2016-ம் ஆண்டு வழங்கியிருக்கிறார் சச்சின். அந்த ஒப்பந்தத்துக்கு ரூ.14 கோடி  பேசப்பட்டது. ஆனால், பேசிய பணத்தை இன்று வரை அந்த நிறுவனம் வழங்கவில்லை. அந்த நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் சச்சின் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

#என்னடா இது... கிரிக்கெட் கடவுளுக்கு வந்த சோதனை!

நாணயம் பிட்ஸ்

பட்ஜெட்டுக்குத் தயாராகும் நிர்மலா சீதாராமன்!

ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட விருக்கிறது மத்திய பட்ஜெட்.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில், `’பட்ஜெட் குறித்து நீங்கள் தந்திருக்கும் யோசனைகள் புதுமையானதாக, இந்தியப் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதாக இருக்கின்றன. அறிஞர்கள்,பொருளாதார வல்லுநர்களால், பல்வேறு ஊடகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட யோசனைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களின் ஒவ்வொரு யோசனையையும் நான் மதிக்கிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.

#ரூ.5 லட்சத்துக்கு வரிச் சலுகையை எதிர்பார்க்கலாமா மேடம்?

வேலைவாய்ப்பு பெருகும்...  டீம்லீஸ் சொல்கிறது!

நாணயம் பிட்ஸ்`உற்பத்தி, பொறியியல் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 58,200 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்’ என டீம்லீஸ் சர்வீசஸ் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்த மூன்று துறைகளிலும் நிகர வேலைவாய்ப்பு   2% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மொத்தம் 19 துறைகள், 14 பகுதிகளில் உள்ள 775 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதன்படி, ஏப்ரல் - செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை  நகரங்களில் பணிக்கு ஆள் சேர்ப்பதில் 5% வளர்ச்சியைக் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

#புள்ளிவிவரம் எல்லாம் நல்லா இருக்கு... ஆனா...?

நாணயம் பிட்ஸ்

பில்லியனர் டு மில்லியனர்!

2008-ம் ஆண்டில் 42 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2.94 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக அளவில் ஆறாவது பெரும் பணக்காரராக இருந்த அனில் அம்பானி, தற்போது பில்லியனர்கள் வரிசையிலிருந்து வெளியேறுகிறார். கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு இறக்கங்கள், நெருக்கடிகள், இழப்பு களுக்குப்பிறகு அவரது மொத்த பிசினஸின் சொத்து மதிப்பு தற்போது ரூ.3,651 கோடியாக உள்ளது.

#இதுதானய்யா வாழ்க்கையின் நியதி!

நாணயம் பிட்ஸ்

இனி நீங்க வில்ஃபுல் டிஃபால்ட்டர்!’

யாஷ் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த பிர்லா சூர்யா நிறுவனம், சூரிய சக்தி தயாரிப்புக்கான பொருள்கள் வாங்குவதற்காக யூகோ வங்கியில் 100 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தது. பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாங்கிய கடனில் 67.65 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த வில்லை. வசதியிருந்தும் கடனை அடைக்காததால், பிர்லா சூர்யா நிறுவனத்தின் இயக்குநர் யசோவர்தன் பிர்லா, `வில்ஃபுல் டிஃபால்ட்டர்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

# காசு வாங்குனா திருப்பக் கொடுக்குறதுதான நியாயம்? 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு