Published:Updated:

3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்!

3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்!
பிரீமியம் ஸ்டோரி
News
3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்!

நீர் மேலாண்மை

நீர் மேலாண்மையின் முக்கிய அம்சம், மழைநீர் அறுவடைதான். நிலத்தில் விழும் மழைநீர் முழுவதையும் சேகரிக்கச் சிறந்த வழி, பண்ணைக்குட்டை அமைப்பதுதான். பண்ணைக்குட்டைகள் அமைத்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.  

3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்!

தற்போது, மழைநீர்ச் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் பலரும் பண்ணைக்குட்டைகள் அமைத்துப் பலன் பெற்று வருகிறார்கள். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள குட்டப்பாளையம் பகுதியில், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிலத்தில் 3 ஏக்கர் 11 சென்ட் பரப்பில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

இதுகுறித்துச் சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதியிடம் பேசினோம். “தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று, நமது பாரம்பர்ய நாட்டுமாடான காங்கேயம் இன மாடு. இந்த இன மாடுகளைப் பாதுகாத்து அவற்றைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த ஆராய்ச்சி மையத்தைத் துவக்கினோம். காலப்போக்கில் நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்ற இயற்கைவழி விஞ்ஞானிகளின் அறிமுகம், எங்களை அடுத்தகட்டத்தை நோக்கிப் பயணிக்க வைத்தது. இயற்கைவழி வேளாண்மை சார்ந்த தற்சார்பு விவசாயம், இடுபொருள் தயாரிப்பு, களப்பயிற்சி, மானாவாரி நில மேம்பாடு, நீர் மேலாண்மை போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். ஒருமுறை பண்ணைக்கு வந்த நம்மாழ்வார் ஐயாதான் மழைநீரைச் சேமிக்க வலியுறுத்தினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்!

அதன்பிறகுதான் இந்தக் குளத்தை அமைத்தோம். இது 210 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், 10 அடி ஆழம் கொண்டது. இந்தக்குளத்தை 2017-ம் ஆண்டு வெட்டினோம். மழைநீர் மற்றும் வாய்க்கால் பாசனக் கசிவு நீர் ஆகியவை குளத்தில் வந்து சேரும் விதமாக இணைப்புக் கால்வாய்களையும் வெட்டியிருக்கிறோம். தொடர்ந்து பெய்த மழையில், குளம் நிறைந்துவிட்டது. குளத்தில், 40,000 மீன் குஞ்சுகளை விட்டிருக்கிறோம். இக்குளத்தால் 6 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள குடிநீர் மற்றும் பாசனக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. குளத்தைச் சுற்றி பல்வேறு மரங்களை நடவு செய்துள்ளோம்” என்ற கார்த்திகேய சிவசேனாபதி இரண்டாவது குளம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

3 ஏக்கர் பரப்பில் பண்ணைக்குட்டை… ஊருக்கு உதவும் ஆராய்ச்சி மையம்!

“எங்கள் கால்நடை ஆராய்ச்சி மையத்தில் 4 காங்கேயம் இன பொலிகாளைகளும் 45 நாட்டுப்பசுக்களும் உள்ளன. இவற்றுக்காக 44 ஏக்கர் பரப்பளவில் மேய்ச்சல் நிலம் உள்ளது. வேம்பு, வெள்வேல் மரங்கள் நிறைந்த அந்த மானாவாரி நிலத்தில் தானாக முளைத்திருக்கும் கொழுக்கட்டைப் புல் நாட்டு மாடுகளுக்கு மிகவும் பிடித்த உணவு. மேய்ச்சல் நிலத்தில் சில இடங்களில் தண்ணீர்த் தொட்டிகள் உண்டு. தேவையானபோது மாடுகள் அத்தொட்டிகளில் உள்ள தண்ணீரைக் குடித்துக் கொள்ளும்.

கடந்த சில ஆண்டுகளில் நிலவிய கடுமையான வறட்சியால் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. முதல் குளம் இருக்கும் வள்ளியரச்சல் கிராமத்துக்கும் ஆராய்ச்சி மையம் அமைந்திருக்கும் குட்டப்பாளையம் பகுதிக்கும் உள்ள தூரம் 8 கிலோமீட்டர். அதனால், அங்கிருந்து தண்ணீர் கொண்டுவருவது கடினமான விஷயம். அதனால், மேய்ச்சல் நிலத்தில் ஒரு குளம் வெட்ட முடிவு செய்து 200 மீட்டர் நீளம், 60 மீட்டர் அகலம், 12 அடி ஆழம் என்ற அளவில் குளம் வெட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு,  கார்த்திகேய சிவசேனாபதி,  செல்போன்: 77081 82270

ஜி.பழனிச்சாமி