அலசல்
சமூகம்
Published:Updated:

“அம்மாவுக்குக் கல்யாணம்!” - நெகிழும் மகன்

“அம்மாவுக்குக் கல்யாணம்!” - நெகிழும் மகன்
பிரீமியம் ஸ்டோரி
News
“அம்மாவுக்குக் கல்யாணம்!” - நெகிழும் மகன்

“அம்மாவுக்குக் கல்யாணம்!” - நெகிழும் மகன்

ன் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார் இளைஞர் கோகுல் ஸ்ரீதர். இந்த இனிய நிகழ்வை நெகிழ்வுடன் கொண்டாடித் தீர்க்கிறது கேரளம்!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் மினி. இடுக்கி மாவட்டம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் வேணு. இவர்கள் இருவருக்கும்தான் திருமணம் நடந்திருக்கிறது. இருவருக்குமே இது இரண்டாம் திருமணம். திருமணத்தை செய்துவைத்தவர் மினியின் மகன் கோகுல். இதை, ‘அம்மாவுக்குத் திருமணம்’ என்று குறிப்பிட்டு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் பட்டதாரி இளைஞர் கோகுல்.

“அம்மாவுக்குக் கல்யாணம்!” - நெகிழும் மகன்

கோகுலிடம் பேசினோம். “நான் சின்னப் பையனாக இருந்த போதிருந்தே அப்பா தினமும் குடித்துவிட்டு வந்து, அம்மாவை அடிப்பார். உதடு கிழிந்து, ரத்தம் வழியும். ஆனால், என் எதிர்காலத்தை நினைத்து எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார் அம்மா. சண்டை முற்றியதால் 2010-ம் ஆண்டு நாங்கள் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டோம். அப்போது எனக்கு 14 வயது. என் அம்மா நிம்மதியாக இருக்க வேறு ஒரு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று அப்போதே உறுதி பூண்டேன். சொன்னால் அம்மா திட்டுவார் என்பதால், இதை யாரிடமும் சொல்லவில்லை. பி.டெக் முடித்து வேலை தேடினேன். கூடவே, அம்மாவுக்கு நல்ல கணவரையும் தேடிக்கொண்டிருந்தேன். இன்னும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால், அம்மாவுக்கு நல்ல கணவர் கிடைத்துவிட்டார்.

“அம்மாவுக்குக் கல்யாணம்!” - நெகிழும் மகன்

நான் படிக்கும்போதே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தேன். இப்போது இந்திய மாணவர் சங்கத்தின் கொட்டியம் பகுதிச் செயலாளராக இருக்கிறேன். என் அம்மாவின் உறவினர்கள் கம்யூனிஸ்ட் சிந்தனையில் ஊறியவர்கள். எனவே, அம்மாவுக்கு வேறு திருமணம் செய்துவைப்பது குறித்த என் எண்ணத்தைக் கூறியபோது அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அம்மாவைத் திருமணம் செய்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர் வேணு, நல்ல மனிதர். ஆரம்பத்தில் அம்மா, திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்பு உறவினர்கள் பேசி சம்மதம் பெற்றோம். இப்போது அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். என் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அம்மா பல கொடுமைகளைத் தாங்கிக்கொண்டார். இனி வரும் நாள்களில் என் பெற்றோர் முகத்தில் நான் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும்” என்றார் நெகிழ்வுடன்.

மகன் தாய்க் காற்றும் நன்றி!

- ஆர்.சிந்து