Published:Updated:

கடிதங்கள் - அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்லப்பா!

கடிதங்கள் - அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்லப்பா!
கடிதங்கள் - அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்லப்பா!

`வறண்ட காலம் - சேமிக்கத் தவறினோம்... தாகத்தில் அலைகிறோம்’ நல்ல கட்டுரை. எந்த ஒரு நாடு நீர், உணவு உற்பத்தியில் செழித்துள்ளதோ அதுவே வல்லரசாகும்.  இங்கே இவ்வளவு கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட வில்லை; மதுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் மூடப் படவில்லை. அறிவை வளர்க்கும் பள்ளிகள்தான் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டு வருகின்றன.
அசோக், விகடன்.காம்

கடிதங்கள் - அரசியல்ல இதெல்லாம் சாதாரணமில்லப்பா!

மித்ஷாவின் மொத்த ஜாதகத்தையும் படிக்கும்போது மலைப்பாக இருந்தது. அரசியல்ல இதெல்லாம் சாதாரண மில்லப்பா!
- பிரணவ், திருநெல்வேலி

வி
ஷால் ஒண்ணு சொல்றார்... ஐசரி கணேஷ் ஒண்ணு சொல்றார்... ஆளாளுக்கு பேட்டிகளாகக் கொடுத்து அடித்துக்கொள்கிறார்கள். விஷால் நடிக்கும் ஆக்‌ஷன் படங்களைவிட அதிக ஆக்‌ஷனை நடிகர் சங்கத்தில்தான் பார்க்க முடிகிறது.
- ஷைலஜா, பொள்ளாச்சி

ங்கள் குடும்பத்தோடு அமர்ந்து கூட்டாக வாசிக்கும் தொடர் ‘அன்பே தவம்’. இந்த வாரம் விட்டுக்கொடுப்பதன் அவசியத்தை வெவ்வேறு உதாரணங்களுடன் அழகாகச் சொன்ன அடிகளார் ஐயாவுக்கு நன்றி.
- சிவகுமார், சென்னை

வெ
ள்ளந்தித்தனம் மாறாமல் அதே கிராமத்து மனிதராக இருக்கிறார் ராமராஜன். உங்கள் கேள்விகளும் அவருடைய பதில்களும் அருமை.
- ஜெனிபர், நாகர்கோயில்

“அ
திக எண்ணிக்கையில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவளித் திருப்போம்’’ என்று சீதாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறார். ஆஹா அருமையான கொள்கை!
- மதுரை பாலா, விகடன் டாட் காம்

`க
டைசி வாய்ப்பு’ தலையங்கம் அருமை. அரசு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுப்பதில் நிச்சயமாகத் தோற்றுவிட்டது. மக்கள் நலனில் எப்போதுமே தமிழக அரசு கோமாவில்தானே இருந்திருக்கிறது. இப்போது மட்டும் என்ன எதிர்பார்க்க முடியும்!
- தாஸ், விகடன் டாட் காம்

ல்லோரிடமும் பால்ய கால `கிக்கி’ கதை நிச்சயமாக இருக்கும்... க்யூட்டான கதைக்குள் வெயிட்டான பின்னணியை வைத்து அதிரவைத்துவிட்டார் ஜான்சுந்தர்.
- அருணாச்சலம், ஃபேஸ்புக்