மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

இந்தக் காலத்தை எஸ்யூவி மாதமாகக் கொண்டாடுவது என கார் கம்பெனிகள் எல்லாம் ஒன்றுகூடி முடிவு செய்திருப்பார்களோ என்று சந்தேகம் எழுகிறது. ஆம், புது கார் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த மாதம் மட்டும் சாய்ஸ் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது.

‘எனக்கு மிட் சைஸ் எஸ்யூவியான க்ரெட்டா பிடிக்கும். ஆனால், அதன் விலையைவிட சற்றுக் குறைச்சலான பணத்தில்... அது காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தால்கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்பவர்களை மனதில் வைத்து, நான்கு மீட்டருக்கும் குறைவான எஸ்யூவியாக வென்யூவை ஹூண்டாய் களம் இறக்கியிருக்கிறது.

‘எனக்கு க்ரெட்டா பிடித்திருக்கிறது. ஆனால் பலரும் க்ரெட்டாவை வைத்திருப்பதால்... அதற்குச் சரிசமமான வேறு ஒரு காரை வாங்க முடியுமா?' என்று ஏங்கிக் கொண்டிருக்கும் கார் ரசிகர்களை மனதில் வைத்து புத்தம் புது கார் கம்பெனியான கியா... செல்ட்டோஸை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

நம் கவனத்தைக் கவரும் இன்னொரு எஸ்யூவி, ஜீப் காம்பஸ். பிராண்டுக்காகவே ஜீப்பை வாங்குபவர்கள் பலர் இருந்தாலும்... ‘ஜீப் காம்பஸை வைத்து ஆஃப்ரோடு சாகசங்கள் செய்ய முடியவில்லையே?' என்ற ஏக்கம், ஜீப் ரசிகர்கள் பலருக்கும் இருக்கும். ஜீப் காம்பஸ் ட்ரெய்ல் ஹாக் அதற்கு விடை கூறுகிறது.

விலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால் ஏழு பேர் பயணிக்கும்படி ஒரு எம்பிவி கிடைக்குமா என்று எதிர்பார்த்தவர்களைத் திருப்திப்படுத்த, ட்ரைபரைக் களமிறக்கி இருக்கிறது ரெனோ.

டாடா ஹேரியர், XUV 500, ஜீப் காம்பஸ் ஆகிய கார்களுக்கு மாற்றாக புத்தம் புதிய எஸ்யூவி இருந்தால் நன்றாக இருக்குமே! அப்படி அறிமுகமாகும் கார், ஹைடெக்காவும், ஹைபிரிட்டாகவும் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்தானே... அதற்காகத்தான் எம்ஜி ஹெக்டர் வந்திருக்கிறது.

வென்யூ, ஹெக்டர், ட்ரெய்ல் ஹாக், செல்ட்டோஸ் என்று அனைத்துமே தங்களை கனெக்டட் கார், இன்டர்நெட் கார் என்று விதவிதமான அடைமொழிகள் கொடுத்து அடையாளப்படுத்திக் கொள்கின்றன. அதனால், இதுவரை கிடைக்காத பல வசதிகள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.

ஆக, எப்படிப் பார்த்தாலும் வாடிக்கையாளர்களின் கை ஓங்கும் காலமாக இது இருக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சியே!

அன்புடன்: ஆசிரியர்