Published:Updated:

``மறக்காம இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க!"- துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு தீவிரவாதியின் ரெக்வஸ்ட் 

``மறக்காம இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க!"- துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு தீவிரவாதியின் ரெக்வஸ்ட் 
``மறக்காம இந்தச் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க!"- துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு தீவிரவாதியின் ரெக்வஸ்ட் 

நியூஸிலாந்தில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் உலகையே உறையவைத்துள்ளது. இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மசூதியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி ப்ரெண்டன் டர்ரெண்ட் (BrentonTarrant) காரில் இருப்பதில் தொடங்கி, அங்கிருந்து இறங்கி மசூதிக்குள் சென்று, உள்ளே இருப்பவர்களைத் துப்பாக்கியால் சுடுவது வரை அனைத்தையும் ஃபேஸ்புக்கில் லைவ் செய்துள்ளான். சுமார் 17 நிமிடங்கள் வரை இந்த வீடியோ பதிவாகியுள்ளது. இதில் வரும் துப்பாக்கிச் சூடு காட்சிகள் ஹெல்மெட் கேமராவில் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பு ஒரு யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யச் சொன்னான் அவன். அது உலகின் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட PewDiePie என்னும் யூடியூப் சேனலைதான்.

உலகின் அதிக சப்ஸ்கிரைபர்கள் கொண்ட சேனல் எது என்பதில் பல நாள்களாகவே இந்தியாவின் டி-சீரிஸ் மியூசிக் சேனலுக்கும் PewDiePie சேனலுக்கும் கடும் போட்டி நிலவிவருகிறது. இதனால் அவ்வப்போது இப்படி இந்தச் சேனல்களில் ஏதேனும் ஒன்றை சப்ஸ்கிரைப் செய்யச் சொல்வது இன்றைய பாப்-கல்ச்சர் டிரெண்ட்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படித்தான் இந்தத் தீவிரவாதியை கூறியிருக்க வேண்டும். இதற்குச் சிலர் PewDiePie சேனலை நடத்தும் ஃபெலிக்ஸ் ஜெல்பெர்க் சாடினார். ஆனால், பலரும் இதற்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும் என அவருக்கு ஆதரவே தெரிவித்துவருகின்றனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ``நியூசிலாந்தில் நடந்த கொடூரங்களைக் கேள்விப்பட்டேன். என்னுடைய பெயர் இதில் அடிபட்டதை நினைத்துத் துன்பப்படுகிறேன். உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.