Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்
தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

ராமநாதபுரம் - கிடப்பில் திட்டங்கள்...தவிப்பில் மக்கள்!

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டம், மக்களின் குடிநீர்த் தேவைக்கு நிலத்தடி நீர் ஆதாரங்களையே நம்பியிருக்கும் நிலை. மாவட்டத்தில் அணைகளோ, ஏரிகளோ இல்லை. எப்போதாவது நிரம்பி வழியும் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஆர்.எஸ்.மங்களம் பெரிய கண்மாய் (நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண்மாய்) ஆகியவை நிரம்பும். மேலும் அங்கிருந்து, மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான கண்மாய்களுக்கும் செல்லும். இதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் பெருகும் நிலை இருந்துவந்தது. தற்போது இவை வறண்டு கிடக்கின்றன.

தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

மாவட்டத்தின் தினசரி குடிநீர்த் தேவை சராசரியாக 79.78 மில்லியன் லிட்டர். இதில் பாதிக்கும் மேல் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் தான் பூர்த்தி செய்யப்படுகின்றன. காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம்மூலம் 30 - 35 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்டத்தில் சராசரி அளவைவிடக் குறைவான மழையே பெய்துள்ளது. வைகைத் தண்ணீரும் முழுமையாகக் கிடைக்கவில்லை. எப்போதாவது திறந்துவிடப்படும் தண்ணீரும் வழிப்பாதைகளில் விரவி நிற்கும் சீமை கருவேல மரங்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் தடுக்கப்பட்டு விடுகிறது.

தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

கடந்த ஆண்டு வைகை அணையிலிருந்து பெறப்பட்ட தண்ணீர், ராமநாதபுரம் நகர்ப் பகுதி யைச் சுற்றிலும் உள்ள ஊரணிகளில் தேக்கப்பட்டது. அதனால், நிலத்தடி நீர் அதிகரித்தது. தற்போது, பல ஊரணிகள் நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன.

கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப் பாட்டைச் சமாளிக்க தி.மு.க ஆட்சியின் போது நரிப்பையூரில் ஏற்படுத்தப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், உப்பு நீரை நன்னீராக்கும் திட்டம் போன்றவை முடங்கிக் கிடக்கின்றன.

- இரா.மோகன்
 படங்கள்: உ.பாண்டி

சேலம் - ‘பஞ்சம் போக்குமா பருவமழை?’

மிழகத்தில் பல மாவட்டங் களுக்குக் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது, மேட்டூர் அணை. கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. தற்போது அணையில் 44.26 அடி அளவுக்குத் தான் தண்ணீர் உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலோ, கர்நாடகா மாநிலத்திலோ மழை பொழியவில்லை என்றால், இன்னும் ஒரு சில மாதங்களில் அணை வற்றிப்போய்த் தமிழகத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்.

மேட்டூர் அணை முறை யாகத் தூர்வாரப்பட வில்லை. கிட்டத்தட்ட 15 அடி உயரத்துக்கு அணையில் சேறுதான் உள்ளது. அதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதுகூட தண்ணீரை முறையாகச் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. மக்கள் பல ஆண்டுகளாகப் போராடியும் மேட்டூர் உபரி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றவில்லை.

தமிழகத்தின் ஈரம்: ராமநாதபுரம், சேலம்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை தவிர்த்து கரியகோவில் அணை, ஆனை மடுவு அணை ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இவை இரண்டுமே தண்ணீர் இல்லாமல் வறண்டுபோய்க் கிடக்கின்றன. சேலம் மாவட்டத் தில் ஓடும் சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவற்றின் குறுக்கே பல தடுப் பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால் இந்தத் தடுப்பணைகளும் காய்ந்துபோய்க் கிடக்கின்றன.

பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட 130 ஏரிகளும் உள்ளாட்சி அமைப்பு களின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட ஏரிகளும் இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஆனால், இவற்றில் பல ஏரிகள் வரைபடத்தில் மட்டும்தான் இருக்கின்றன. பன மரத்துப்பட்டி ஏரிதான் ஒரு காலத்தில் சேலம் மாநகர மக்களின் தாகத்தைத் தீர்த்துவந்தது. மாநகராட்சியை ஒட்டி 2,135 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த ஏரி தற்போது சில நூறு ஏக்கர் பரப் பாகச் சுருங்கிவிட்டது. ஏரி முழுவதும் புதர் மண்டிக் குப்பைக்காடாகக் காட்சியளிக்கிறது.

மேட்டூர் அணையில் தற்போதைய நிலவரப்படி 14.5 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநா டிக்கு 271 கன அடி அளவு நீர்வரத்து இருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிடத் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.

மேட்டூர் அணைக்குத் தென் மேற்குப் பருவ மழையால் மட்டுமே நீர் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் அதிக நீர்வரத்து இருக்கும்.கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் 4.7 டி.எம்.சி தண்ணீர் மட்டும்தான் இருந்தது. ஜூலை மாதத்தில் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் 50 அடி உயரத்துக்குத்தான் தண்ணீர் இருந்தது. ஜூன் 18-ம் தேதிக்கு மேல் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பி வழிந்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை நீர்வரத்துக் குறைவாகத் தான் இருக்கிறது.

சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம், சேலம் மாநகராட்சிக் குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற திட்டங் கள் செயல்பாட்டில் இருக்கின்றன. இவற்றின் மூலம் ஒரு நாளைக்கு 445 மில்லியன் லிட்டர் குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றன.

- வீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு