Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்
தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

கடலூர் - தலைநகரின் தாகம் தீர்க்கும் வீராணம்

மிழகத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று வீராணம் ஏரி. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகாக்களில் 44,856 ஏக்கர் பரப்பு நிலங்கள் பாசனம் பெறுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த ஏரியிலிருந்து, ‘புதிய வீராணம் திட்டம்’ மூலமாக சென்னை நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சென்னையின் தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காகக் கடந்த மாதம், கீழணையிலிருந்து வடவாறு வழியாகக் காவிரி தண்ணீர் கொண்டுவரப்பட்டு ஏரியின் முழு அளவான 47.50 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டது. அதோடு, விவசாயப் பயன்பாட்டுக்கு எடுத்துவிடக் கூடாது என்பதற் காகப் பாசன மதகுகள் அனைத்தும் கான்கிரீட் கொண்டு அடைக்கப்பட்டன. ஜூன் மாதம் முதல் வாரம்வரை, வீராணம் ஏரியிலிருந்து விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

தற்போது ஏரியின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, 42 அடி அளவில்தான் தண்ணீர் உள்ளது. தற்போது சென்னைக்கு விநாடிக்கு 41 கன அடி தண்ணீர்தான் அனுப்பப்படுகிறது. இன் னும் 20 - 25 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் அனுப்ப முடியும். ஏரியை முறையாகத் தூர் வாராததால், கால் பங்கு அளவுக்குச் சேறும் சகதியுமாகத்தான் இருக்கிறது. தூர்வாரினால், கூடுதல் தண்ணீர் சேமிக்க முடியும்.

வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியின் ஆழம் 5.5 அடி. தற்போது, 5 அடி உயரத்துக்குத் தண்ணீர் உள்ளது. நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலக்கரிச் சுரங்கத் திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வாலாஜா ஏரியில் நிரப்பி, அந்தத் தண்ணீர் பரவனாற்றுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து பம்ப் செய்யப்படும் தண்ணீர், வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொண்டுசெல்லும் குழாயில் சேர்க்கப்படுகிறது. சேத்தியா தோப்பிலிருந்து பண்ருட்டி வரை 43 இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரும் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த வகையில், வாலாஜா ஏரியில் இருந்து விநாடிக்கு 13 கன அடி தண்ணீரும், போர்வெல் களில் இருந்து விநாடிக்கு 20 கன அடி தண்ணீரும் சென்னைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் ஏரி, திட்டக்குடி வெலிங்டன் நீர்த் தேக்கம் ஆகியவை முற்றிலும் வறண்டுவிட்டன.

- ஜி.சதாசிவம்
படம்: எஸ்.தேவராஜன்

நாமக்கல் - தகிக்கும் நாமக்கல்!

விவசாய பூமியான நாமக்கல் மாவட்டம், தண்ணீர்ப் பிரச்னையால் விவசாயத்தையும் இழந்து, குடிநீருக்காகவும் அல்லாடும் நிலையில் இருக்கிறது. பெரும்பாலும் அனைத்து ஏரி குளங்களும் வறண்டுவிட்டன. நாமக்கல் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் கிடைத்துவந்த நிலையில், இப்போது மாதத்துக்கு இரண்டு முறையாவது தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

காவிரியின் குறுக்கே ஜேடர்பாளையம் தடுப்பணை உள்ளது. அங்கு தொடங்கும் ராஜவாய்க்கால், சுமார் 33 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, நன்செய் இடையாறு வரை செல்கிறது. இதன் மூலம், 25,000 ஏக்கர் பரப்பு நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

பொய்யேரி, கொமாராபாளையம், மோகனூர் வாய்க்கால்களுக்கு ராஜ வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்கிறது.போதிய மழையில்லாததால் காவிரி ஆறு முற்றிலும் வறண்டு காணப்படு கிறது. கடந்த ஆறு மாதங்களாக ராஜ வாய்க்காலும் வறண்டு கிடக்கிறது. இதன் மூலம் பாசன வசதி பெற்றுவந்த விளை நிலங்கள் தரிசாகிவிட்டன.

தமிழகத்தின் ஈரம்: கடலூர், நாமக்கல்

‘தண்ணீர் வரும் காலங்களில் ஜேடர்பாளையம் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், கடைமடைப்பகுதி வரை சென்றடையும் வகையில் ராஜவாய்க்காலைத் தூர்வார வேண்டும். பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே அளவீடு செய்த இடத்தில் தடுப் பணை அமைக்க வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

- ர.ரகுபதி, படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு