Published:Updated:

தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி
தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

பிரீமியம் ஸ்டோரி
தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

தூத்துக்குடி - குட்டிசுவராகக் காட்சியளிக்கும் தடுப்பணை!

தூ
த்துக்குடி மாவட்டத்துக்கு மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணை ஆகியவைதான் முக்கிய நீர் ஆதாரங்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றின் மூலம் இந்த இரண்டு அணைகளுக்கும் தண்ணீர் வருகிறது.

இந்த இரண்டு அணைகள்மூலம் வரும் தண்ணீர் 53 குளங்களில் நிரம்பி, 46,107 ஏக்கர் பரப்பு பாசனம் பெறுகிறது. மாவட்டத்தின் குடிநீர்த் தேவைக்கும் இந்த அணைகளிலிருந்துதான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. மருதூர் அணை, ஆறு அடி ஆழமும் 4,000 அடி நீளமும் கொண்டது. ஸ்ரீவைகுண்டம் அணை, எட்டு அடி ஆழமும் 1,000 அடி நீளமும் கொண்டது. தற்போது இரண்டு அணைகளிலும் சேறு மண்டிக்கிடப்பதால், மூன்றடி ஆழத்துக்குத்தான் தண்ணீர் தேக்க முடியும்.

தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

மருதூர் அணையிலிருந்து 4-வது பைப்லைன் திட்டம் மூலமாகத் தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதில், ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வார வேண்டும் என தி.மு.க மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் ஜோயல், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். தீர்ப்பாயத்தின் உத்தரவால் கடந்த 2015-ம் ஆண்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கப் பட்டுப் பல குளறுபடிகளால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் அணையில் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 20 எம்.ஜி.டி திட்டத்தின்படி ஸ்டெர்லைட் உள்ளிட்ட 21 தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் 9.20 கோடி லிட்டர் (20 மில்லியன் காலன்) தண்ணீரைக் குடிநீர் வடிகால் வாரியம் வழங்கி வந்தது. இதை எதிர்த்தும் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார், ஜோயல். ‘ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து எடுக்கப் படும் தண்ணீரை, குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளுக்கு வழங்கக் கூடாது” என உத்தரவிட்டது, தீர்ப்பாயம்.

தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

தற்போது அணைப்பகுதி முழுவதும் அமலைச் செடிகள் சூழ்ந்து காணப் படுகின்றன. 53 குளங் களிலும் சீமைக் கருவேல மரங்கள் முளைத்துக் கிடக்கின்றன. அதனால், தண்ணீர் தேங்க முடியாத சூழல் உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணை யிலிருந்து வெளியேறிக் கடலில் கலக்கும் உபரி நீரைச் சேமிக்க முக்காணிப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் விளைவாக... கடந்த ஆண்டு 29 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்ட இரண்டே மாதங்களில் தாமிரபரணியில் வந்த வெள்ளத்தால் தடுப்பணை இரண்டாகப் பிளந்து விட்டது.

தடுப்பணையை ஆழப் படுத்துவதாகக்கூறி திருட்டுத்தனமாக லாரி களில் மணல் அள்ளப் பட்டதால், குட்டிச்சுவர் போலக் காட்சியளிக்கிறது, தடுப்பணை. தற்போது 27 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ப.கதிரவன்

திருச்சி - கைவிரித்த கர்நாடகம்... காய்ந்து கிடக்கும் காவிரி!

தி
ருச்சி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவமழை போதுமான அளவுக்குப் பெய்யவில்லை. கர்நாடகாவும் கைவிரித்துவிட்ட காரணத்தால், காவிரி ஆற்றிலும் தண்ணீர் வரவில்லை. எனவே கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது. மாவட்டத்தில் உள்ள கல்லணை, முக்கொம்பு, பொன்னணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் வறண்டு கிடக்கின்றன.

தமிழகத்தின் ஈரம்: தூத்துக்குடி, திருச்சி

காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டங்கள்மூலம் பல்வேறு மாவட்டங்களுக்குக் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில், கிட்டத்தட்ட 200 ஏரிகள் உள்ளன. இவற்றுக்குக் காவிரி மட்டுமல்லாமல் அதன் கிளை ஆறுகளான அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, அரியாறு, கோரையாறு, குண்டாறு, உய்யக்கொண்டான், குடமுருட்டி எனச் சுமார் 35 ஆறுகள்மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. ஆனால், ஏரிகளும் ஏரிகளுக்கான வரத்து வாய்க்கால்களும் தூர் வாரப்படாததால், ஏரிகள் காய்ந்து கிடக்கின்றன. திருச்சி மாநகரில் பாய்ந்தோடும் உய்யக்கொண்டான் ஆறு, சாக்கடையாக மாறிக்கிடக்கிறது.

- சி.ய.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு