Published:Updated:

இந்தோனேசியாவில் கெட்லி... இந்தியாவில் இட்லி..! இது இட்லி வரலாறு #OriginOfIdli

இந்தோனேசியாவில் கெட்லி... இந்தியாவில் இட்லி..!  இது இட்லி வரலாறு  #OriginOfIdli
News
இந்தோனேசியாவில் கெட்லி... இந்தியாவில் இட்லி..! இது இட்லி வரலாறு #OriginOfIdli

இந்தோனேசியாவில் கெட்லி... இந்தியாவில் இட்லி..! இது இட்லி வரலாறு #OriginOfIdli

வி பறக்க சுடச்சுட இட்லியை தட்டில் வைத்து, கொஞ்சம் தக்காளிச் சட்னி, கொஞ்சம் தேங்காய்ச் சட்னி, நிறைய சாம்பார் ஊற்றிச் சாப்பிட்டா, `அட அட அட...’ என சிலிர்ப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள். இதற்கு நேர்மாறாக இட்லியைக் கண்டால் `பத்து அடி பேக்’ அடிப்பவர்களும் உண்டு. உலக சுகாதார நிறுவனமே (WHO), உலகின் சிறந்த உணவு வகைகளில் ஒன்றாக இட்லியைப் பரிந்துரை செய்கிறது. இந்திய உணவு கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது `இட்லி’ என்று உலகளவில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், உண்மையில் இட்லி இந்திய கண்டுபிடிப்புதானா?

இந்தோனேசிய உணவான `கெட்லி'தான் பரிணாம வளர்ச்சிபெற்று இந்திய உணவு `இட்லி'யாக உருவெடுத்துள்ளது என்ற வரலாறு தெரியுமா? அந்நாட்டு விவசாயிகளின் காலை நேர உணவான இந்த கெட்லி, தயிரில் உளுந்தை ஊறவைத்து அரைத்து, நன்கு வேகவைத்து தயாராகும் ஓர் உணவுவகை. அங்கிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த மன்னர்கள் மற்றும் வணிகர்கள் மூலம் இந்த உணவு இந்தியா வந்திருக்கக்கூடும் என்பது உணவு ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

இட்லி என்பது, எண்ணெய் எதுவும் பயன்படுத்தாமல் ஆவியில் வேகவைத்து எடுப்பது. ஆனால், சங்ககாலத்தில் இட்லியை நெய்யில் பொரித்து எடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா. தமிழ்நாட்டில் `இட்லி' இருந்திருப்பதுக்கான ஆதாரம் சங்க இலக்கியங்களில் எங்கும் இல்லை. கி.பி.920-களில் சிவகொட்டியாச்சாரியா எழுதிய `வட்டாராதனே’ எனும் கன்னட இலக்கியத்தில்தான் முதன்முதலில் `இட்டலீஜ்' எனும் வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த இட்டலீஜ், நன்கு புளித்த தயிரில் உளுந்தை ஊறவைத்து சீரகம், பெருங்காயம், மல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, நெய்யில் பொரித்து எடுத்து உண்ணப்பட்ட உணவு வகை. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதன் பிறகு, கி.பி.1130-களில் வாழ்ந்த மூன்றாம் சோமேஸ்வர மன்னன் எழுதிய `மனசொல்லசா’ எனும் சம்ஸ்கிருத இலக்கிய நூலில் `இட்டரிக்கா’ எனும் வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று நாம் அனைவரும் உண்ணும் இட்லி வகை, எந்த இலக்கியச் சான்றுகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆயுர்வேதம், சித்த மருத்துவர்கள் தொடங்கி மாடர்ன் மெடிசின் மருத்துவர்கள் வரை அனைவரும் பரிந்துரைக்கும் இந்த இட்லி, ஏறக்குறைய 700 ஆண்டுகளாக உண்ணப்பட்டு வருகிறது. ஆனால், இதன் தோற்றம் இன்றும் மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

தமிழகக் கோயில்களில், பல்லவர்களின் காலத்திலிருந்து இட்லி வழங்கப்பட்டுவருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் மிகவும் பிரசித்திபெற்றது காஞ்சிபுரம் இட்லி. இது இந்தக் கால இட்லிபோல வட்டமாக இருக்காது. மந்தாரை இலையில் தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட மாவை, கனமான உருளை (Cylindrical) வடிவப் பாத்திரத்தில் ஊற்றி, சுமார் இரண்டு மணி நேரம் ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். இதுவே, பழைமைவாய்ந்த காஞ்சிபுரம் இட்லி. இதன் பிறகே உளுந்து, அரிசி ஆகிய தானியங்களை அரைத்து, நொதித்து எளிதில் இட்லி தயாரிக்கும் முறை பரவலானது.

நன்மைகள்:
ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்துவிதமான ஊட்டச்சத்தும் இதில் இருக்கிறது. ஒரு இட்லியில் 85 கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கால்சியம் முதலியவை சரியான அளவில் இருக்கின்றன. கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை. அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை உபயோகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கேரளா `வட்டப்பம்’, மங்களூரு `சன்னாஸ்’, குஜராத் `டோக்ளா’ என இந்தியா முழுவதும் இட்லியின் அவதாரம் ஏராளம். இட்லி மீந்துபோனாலும் நோ பிராப்ளம், `உப்புமா’  செஞ்சுரலாம்!