சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

வலைபாயுதே

facebook.com/Bogan Sankar
பெண்களே, தயவுசெய்து நெரிசல் மிகுந்த நெடுஞ் சாலைகளில் நடந்துகொண்டே ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்று ஸ்டேட்டஸ் போடாதீர்கள்.

வலைபாயுதே


 

twitter.com/Kozhiyaar
திருமணம் ஆன புதிதில் என்ன பொய் சொன்னாலும் நம்பிவிடும் மனைவி, சிறிது காலத்திற்குப் பிறகு உண்மை சொன்னால்கூட நம்புவதில்லை.

facebook.com/Jeyachandra Hashmi
விருப்பத்திற்கு மீறி எதைத் திணித்தாலும் வெளியே துப்பிவிடுவது குழந்தையின் இயல்பு; தமிழகத்தின் இயல்பும்கூட!

facebook.com/Syed Abdul Kadhar
நாடாளுமன்றத்தில் காவிரி நதிநீர் உரிமை, நீட் குறித்து திருமா பேசுகிறார். நீட் எப்படி மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று திருச்சி சிவா பேசுகிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு எதிரான நீதி விசாரணை தாமதமாவது குறித்துக் கனிமொழி கொந்தளிக்கிறார்.காஷ்மீர், பியூட்டிஃபுல் காஷ்மீர் என்று பாடத்தான் ஆள் இல்லை.

facebook.com/Aravindh Sachidanandam
“தமிழ் இலக்கிய உலகின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்கள்-பெரியவர் பட்டியல் வெளியிட்டி ருக்கிறார்...”

“அப்படியா. எத்தனை பேர்?”
“பதினைந்து பேர்”
“மகிழ்ச்சி! என்ன எழுதினார்கள்...?”
“வாராவாரம் பெரியவரைப் பாராட்டி மெயில் எழுதினார்கள்.”

வலைபாயுதே

facebook.com/Suresh Kannan
முன்பெல்லாம் எந்தவொரு தமிழ்த் திரைப்படத்திலாவது சற்று லேசான லிப்லாக் சீன் வந்தால் பார்வையாளர்களிட மிருந்து எழும் ஆரவாரக் கூச்சலில் அரங்கமே அல்லோலகல்லோலப்படும். ஆனால் இப்போதெல்லாம் இயல்பாகக் கடந்து விடுகிறார்கள். இந்தியா வல்லரசு ஆகிக்கொண்டிருப்பதன் அடையாளங்களுள் இதுவொன்று!

twitter.com/senthilcp
சுற்றுப்புறத்தை சுத்தபத்தமா வெச்சிருக்கறதுல இந்தியா விலேயே கேரளாதான் 
நெ 1.
வெரிகுட்,எப்படி உங்களால முடியுது?

நாங்கதான் குப்பைகளை எல்லாம் தமிழ்நாட்டு பார்டர்ல கொட்டிடறோமே... 

வலைபாயுதே

twitter.com/mohanramko
திருமணமானதும், மனைவி வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும்போது, OPR மாதிரி தனியா மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கு... 

twitter.com/ItsJokker
நம்மளைப் பத்தி ஊரே பாராட்டுன ஒரு விஷயத்தை மனைவிகிட்ட கேக்குறப்பதான், அவங்களுக்குள்ள இருக்கற ‘புளூ சட்டை மாறன்’ வெளிப்படுறார்.

twitter.com/devpromoth
இந்திய அணியின் ஜெர்சி காவியா இருக்குன்றதவிட பெரிய பிரச்னை... கன்றாவியா இருக்குன்றதுதான்...

twitter.com/JamesStanly
யூனிஃபார்மை காவி ஆக்கியதற்கு நன்றி... அப்படியே ஸ்கோரைக் கூட்டுவதற்கு ஓட்டுமிஷினைப் பயன்படுத்தவும்.

வலைபாயுதே

twitter.com/shivaas_twitz
ஏன்டா, மழை இப்படி லேசு வாக்குலயே அடிக்குதே... யாகத்துல ஊத்துன நெய் பழசா..?

twitter.com/Kozhiyaar 
கூட்ட நெரிசலில் நகரப் பேருந்தில் பயணிப்பவருக்கு எந்த யோகாசனமும் எளிதில் கைகூடும்.

facebook.com/vadivel.murugan.796 
பிக்பாஸ் டு சேரன் : வந்து ரெண்டு நாள்ல 43 தடவ சமுதாயம், 64 தடவ சமூக மக்கள். 76 தடவ சமூகக் கட்டமைப்புன்னு சொல்லிருக்க...

twitter.com/amuduarattai
‘கேன் நீர்’ இன்றி அமையாது இவ்வுலகு.

- சைபர் ஸ்பைடர்