வழக்கமாக, கடைகளில் தொங்கும்போதே அட்டைப்படத்தில் யாரென்று தெரியவரும். இந்த வாரம் கையில் வாங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது. சபாஷ் விஜய் சேதுபதி & ஜனநாதன்.
-ராபா, காஞ்சி.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘இன்னா நாற்பது இனியவை நாற்பது’ தொடரில் ஆண்ட்ரோபாஸ் பற்றிய இன்ட்ரோ செம பாஸ்!
-ஜெர்லின், ஆலந்தூர்.
சிவகார்த்திகேயனிடம் ரஜினி ஸ்டைல் இருக்குன்னு நெனைச்சுட்டிருந்தோம். ‘ரிக்ஷாக்காரன்’ ரீமேக் பார்த்தா, எம்ஜிஆர் ஸ்டைலும் இருக்கேன்னு தோணிச்சு.
-மல்லிகா அன்பழகன், சென்னை -78.
நாஞ்சில் சம்பத் பரிந்துரைத்த மேடைப்பேச்சு குறித்த குறிப்புகள் மிகுந்த பயனுள்ளதாக இருந்தன.
- சுகந்தி நாராயண், வியாசர் காலனி.
கார்ட்டூன்களுக்குப் பேர்போனது ஆனந்த விகடன் மட்டுமே. அது ஏன் என்பதற்குச் சான்றாக இருந்தது, இந்த வார கார்ட்டூனும். மொத்தக்குழுவுக்கும் பாராட்டுகள்!
-கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.
புதிய பகுதியான ‘டைட்டில் கார்டு’ விறுவிறுப்பாக உள்ளது. அடுத்த வாரம் யார் என்று ஆவலாக எதிர்பார்க்கவும் வைக்கிறது.
-கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.
நாம் ரொம்ப சாதாரணமாகக் கடந்துபோகிற விஷயங்களில் இவ்வளவு இருக்கிறதா என்று எண்ண வைக்கிறது ‘ஆன்லைன் ஆஃப்லைன்’ தொடர்.
-கோவை எஸ்.வி.எஸ்.மணியன், டாடாபாத்.
அன்பே தவம் தொடரில் அடிகளார் சொல்லும் குட்டிக்கதைகள் சுவாரஸ்யம்.
-பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.