Published:Updated:

`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..!’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்

பல வழிகளில் முயன்றும் நேற்று வரை அனில் அம்பானியால் பணம் திரட்ட முடியவில்லை எனக் கூறப்பட்டது. இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) அனில் அம்பானி பணம் செலுத்துவாரா அல்லது பணம் செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற கேள்வி எழுந்தது.

`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..!’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்
`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..!’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்

எரிக்சன் நிறுவனத்துக்கு  அனில் அம்பானி கொடுக்க வேண்டிய கடனை கடைசி நேரத்தில் அடைத்து, தம்பியை ஜெயிலுக்குப் போகாமல் காப்பாற்றியுள்ளார் அண்ணன் முகேஷ் அம்பானி. இதற்காகத் தன் சகோதரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அனில். 

`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..!’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனம் 46,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியது. இந்த நிறுவனத்துக்கு 40 வங்கிகள், நிறுவனங்களிடத்தில் கடன் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்துகளை விற்று கடனை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், சொத்துகளை விற்க முடியவில்லை. இதையடுத்து, இந்த நிறுவனம் தன்னை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகியது.  

இதனிடையே ஸ்வீடன் நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் நிறுவனத்திடமிருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குத் தொழில்நுட்பங்கள், கருவிகள், சேவைகள் அளிக்க ரூ.2014-ம் ஆண்டு 7 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி ரிலையன்ஸ் நிறுவனம் தர வேண்டி இருந்தது.

இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.45,000 கோடி கடனில் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையின்படி ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதித்தது. கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாள்கள் அவகாசத்தை அளித்தது. அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.550 கோடியை எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.  

ஆனால், கெடு தேதி முடிவடைந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அந்தத் தொகையை எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்தவில்லை. இதையடுத்து, எரிக்சன் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரூ. 550 கோடியில், நிலுவைத் தொகையான 453 கோடியை 4 வாரத்துக்குள் செலுத்தாவிட்டால் அனில் அம்பானி 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அண்மையில் உத்தரவிட்டிருந்தது. 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  மார்ச் 19-ம் தேதிக்குள் (இன்று) எரிக்சன் நிறுவனத்துக்கு 453 கோடி ரூபாய் வழங்காவிட்டால், சிறைக்குச் செல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்கு அனில் தள்ளப்பட்டார்.  

`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..!’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்

இதையடுத்து, பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் அனில். ரூ.118 கோடி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது. இது தவிர, வருமான வரித் துறையிடமிருந்து ரீஃபண்ட் தொகை ரூ.260 கோடி, வந்திருக்கிறது. ஆனால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸுக்குக் கடன் தந்த நிறுவனங்கள் புகார் செய்ததன் விளைவாக, அந்த ரீஃபண்ட் தொகையை விடுவிக்கத் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. 

இதையடுத்து, பல வழிகளில் முயன்றும் நேற்று வரை அவரால் பணம் திரட்ட முடியவில்லை எனக் கூறப்பட்டது. இதனால், நீதிமன்ற உத்தரவுப்படி செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) அனில் பணம் செலுத்துவாரா அல்லது செலுத்த முடியாமல் சிறை செல்வாரா என்ற கேள்வி எழுந்தது. 

ஆனால், நேற்றிரவு அனில் அம்பானியின் மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  குழுமம், எரிக்சனுக்கு செலுத்த வேண்டிய, 453 கோடி ரூபாயை செலுத்தி, அனிலை நெருக்கடியிலிருந்து மீட்டது. இதை எரிக்சன் நிறுவனமும் உறுதி செய்த நிலையில், தன்னைக் கடைசி நேரத்தில் கைவிட்டுவிடாமல் காப்பாற்றியதற்காகத் தன் சகோதரர் முகேஷ் அம்பானிக்கும் அவரின் மனைவி நிட்டா அம்பானிக்கும் அனில் நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், நெருக்கடியான நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்று தக்க நேரத்தில் உதவியதற்குத் தாமும் தம் குடும்பத்தாரும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

`நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா..!’ - அனில் அம்பானியைக் கடைசி நேரத்தில் காப்பாற்றிய முகேஷ்

முன்னதாக ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு, முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சொத்துகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனியாகப் பிரிந்த நிலையில், ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையே நின்றுபோனது. 

இந்த நிலையில்தான், கடன் நெருக்கடியால் அண்ணனின் உதவியை நாடினார் அனில். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு விற்று கடனை அடைக்க அவர் முயன்றபோது, ``பழைய கடன்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டேன்’’ என்ற முகேஷ் அம்பானி பின்வாங்கியதால், அனில் அம்பானி நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டார். இருப்பினும், கடைசி நேரத்தில் உடன் பிறந்த சகோதரன் என்ற ரத்த பாசத்தின் அடிப்படையிலும் அம்பானி குடும்ப கௌரவம் என்ற அடிப்படையிலும் அனிலுக்கு முகேஷ் அம்பானி உதவியதாகத் தெரிகிறது.