Published:Updated:

`நீங்கள் யூகிக்கும் அளவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை!'- ஹெலிகாப்டர் குறித்து தாசில்தாரின் அடடே விளக்கம்

`நீங்கள் யூகிக்கும் அளவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை!'- ஹெலிகாப்டர் குறித்து தாசில்தாரின் அடடே விளக்கம்
`நீங்கள் யூகிக்கும் அளவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை!'- ஹெலிகாப்டர் குறித்து தாசில்தாரின் அடடே விளக்கம்

கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே ஹெலிஹாப்டர் ஒன்று நேற்று இறங்கியதால் பரபரப்பு. இதனால் பதறிப்போன இரண்டு மாவட்ட மக்கள், ஸ்மார்ட் சிட்டிக்கான ஆய்வா இல்லை... மணல் குவாரிக்காகவா என கேள்வி எழுப்பியுள்ளனர். 

அரியலூர் மாவட்டத்துக்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் நடுவே கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. இதில் திருமானூர், மஞ்சமேடு, ஏலாக்குறிச்சி பகுதிக்கும் தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி பகுதிக்கும் இடையே  இன்று ஆற்றுக்கு நடுவே மணல் புழுதி பறக்க ஹெலிகாப்டர் ஒன்று திடீரென இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் குவாரி அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா எனப் புரியாமல் குழப்பத்தில் தவித்துவருகின்றனர் அப்பகுதி மக்கள்.

"கொள்ளிடம் ஆற்றில் தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக நகர்ப் பகுதிக்குக் குடிநீர் கொண்டுசெல்வதற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆய்வா" எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்பகுதியில், அரசு தொடர்ந்து மணல் குவாரியைச் செயல்படுத்திவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடிக்கொண்டிருக்கையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி மதியம், இரவு மற்றும் அதிகாலையிலும் பறந்துகொண்டிருக்கிறது.

கொள்ளிடம் ஆற்றின் நடுவே மணல் புழுதி பறக்க ஹெலிஹாப்டர் ஒன்று இறங்கியது. அதிலிருந்த சிலர் ஆற்றில் இறங்கிப் பார்வையிட்டனர். திடீரென ஹெலிஹாப்டர் இறங்கியதைக் கேள்விப்பட்டு, எதற்கு எனப் புரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர்.

இதுகுறித்து அரியலூர் வட்டாட்சியரிடம் கேட்டபோது, "தஞ்சாவூரில் உள்ள விமானப்படையைச் சேர்ந்தவர்கள் பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கலாம். நீங்கள் யூகிக்கும் அளவிற்கு எந்தப் பிரச்னையும் இல்லை" என்று அலட்சியமாகக் கூறினார். "எவ்வளவோ இடங்கள் இருக்கும்போது ஆற்றுக்கு நடுவே இறக்கி பயிற்சி எடுப்பதற்கு என்ன அவசியம். இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது" என மக்கள் அச்சம் தெரிவித்தனர்.