Published:Updated:

சைடு வேவ்ஸ் டூ பிக்ஸி கட்... மெல்லிய கூந்தலுக்கேற்ற ஹேர்ஸ்டைல்ஸ்!

சைடு வேவ்ஸ் டூ பிக்ஸி கட்... மெல்லிய கூந்தலுக்கேற்ற ஹேர்ஸ்டைல்ஸ்!
சைடு வேவ்ஸ் டூ பிக்ஸி கட்... மெல்லிய கூந்தலுக்கேற்ற ஹேர்ஸ்டைல்ஸ்!

பெண்கள் தலைமுடியின் அடர்த்திக்கேற்ப சரியான ஹேர்ஸ்டைல் தேர்வு செய்தால், நிச்சயம் அடர்த்தியாகத் தெரியும் மாயையை உருவாக்கலாம்.

டர்த்தியான தலைமுடி மீது யாருக்குத்தான் ஆசை இருக்காது... ஆனால், எல்லோருக்கும் அடர்த்தியான தலைமுடி இருப்பதில்லையே! `எத்தனையோ சிகிச்சை முறைகளைப் பின்பற்றியும் எந்த முன்னேற்றமும் இல்லை!’ என வருத்தப்பட்டே, பலருக்கு முடி உதிர்ந்த ஏராளமான கதைகள் உண்டு. சரி, மெல்லிய தலைமுடிக்கு ஏற்றதுபோல் முடி வெட்டலாம் என்று பார்லர்களுக்குப் போனால், `என்னடா பண்ணிருக்கீங்க!’ என்ற மைண்ட்வாய்ஸுடன்தான் வீடு திரும்புவோம். இனி அந்தக் குழப்பம் தேவையில்லை. பெண்கள் தலைமுடியின் அடர்த்திக்கேற்ப சரியான ஹேர்ஸ்டைல் தேர்வு செய்தால், நிச்சயம் அடர்த்தியாகத் தெரியும் மாயையை உருவாக்கலாம்.

சில அடிப்படை டிப்ஸ்:

உங்கள் தலைமுடியின் நிறம் அடர்த்தியான கருமை நிறத்தில் இருந்தால், சற்று வெளிர் நிறத்தில் மாற்றுவது சிறப்பு. ஏனென்றால், உச்சந்தலையின் (Scalp) வெளிர் நிறம், தலைமுடியின் கருமை நிறத்தைத் தனியாக முன்னிலைப்படுத்திக் காட்டும். முடிந்தவரை ஸ்கால்ப் தெரியாதளவுக்கு பார்த்துக்கொண்டாலே மெல்லிய தலைமுடி இருப்பதுபோல் தெரியாது.

நுனி முடிகளில் ஏற்படும் பிளவுகளை (Split-ends) உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

உருளை வடிவ சீப்புகளை (Brush) உபயோகப்படுத்துவது நல்லது. எப்போதும் ஒரு பக்கமாகவே தலைமுடியைச் சீவுவதைத் தவிர்க்க வேண்டும். 

எலாஸ்டிக் ஹேர்பேண்ட் அல்லது சிறிய ஸ்கார்ஃப் (Scarf) போன்றவற்றை அணிவதால், மெல்லிய கூந்தல் சற்று அடர்த்தியானதைப்போல் காண்பிக்கும்.

சைடு வேவ்ஸ்:

ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் அல்லது ஸ்ட்ரெயிட் ஹேர்ஸ்டைல் எப்போதும் மெல்லிய தோற்றத்தைத்தான் தரும். வேவி (Wavy) அல்லது கர்லிங் செய்வதால் தலைமுடி சற்று வால்யூம் பெறும். பார்ட்டிஷன் அல்லது இரண்டு பிரிவுகளாக தலைமுடியைப் பிரிக்கும்போது தலையின் நடுவில் பிரிக்காமல், ஒரு பக்கமாகப் பிரிப்பதன் மூலம் முடிகளின் அடர்த்தி அதிகமாகத் தெரியும். உங்கள் முக அமைப்பு சிறியதாக இருந்தால், அதிகளவு வேவ்ஸ் இருப்பது சிறந்தது. இந்த வேவி ஹேர்ஸ்டைல், நன்கு படிந்திருக்க அவசியமில்லை. கட்டுக்கடங்காத வேவி ஹேர்ஸ்டைல், வால்யூமை மட்டுமல்ல ஸ்டைலிஷ் தோற்றத்தையும் சேர்த்துக்கொடுக்கும்.

கிரீடப் பின்னல்:

கிரீடம் சூட்டப்படும் இடத்தில் பின்னலிடுவதால், மெல்லிய முடிகள் ஒன்றிணைந்து அடர்த்தியான கூந்தல் இருப்பதுபோன்ற மாயை உருவாக்க முடியும். எப்போதும் பின்னப்படும் இடத்தில் இல்லாமல் வித்தியாச இடத்தில் பின்னலிடுவதால், மெல்லிய தலைமுடியை மறைப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் கவனத்தையும் சிதறடிக்க முடியும். பகட்டானத் தோற்றத்தையும் பெறலாம்.

டாப் மெஸ்ஸி பண்:

பெண்களின் க்ளாசிக் ஹேர்ஸ்டைல் என்றாலே அது `பண்' அல்லது `கொண்டை’தான். மெல்லிய முடிகளைக்கொண்டிருப்பவர்கள், உச்சந்தலையில் ஏற்றி சிறிய கொண்டை போட்டாலே போதும். ஆனால், இந்த பண் சீராகச் செதுக்கிவிட்டதுபோல் இல்லாமல், `மெஸ்ஸி' அல்லது சற்று கலைந்தபடி இருப்பது நல்லது. பாரம்பர்ய உடையாகட்டும், மாடர்ன் அவுட்ஃபிட்டாகட்டும் எல்லாவிதமான உடைகளுக்கும் இந்த ஹேர்ஸ்டைல் பொருந்தும்.

போனிடெயில்:

அனைத்துவிதமான முக வடிவமைப்புக்கும் ஏற்ற ஹேர்ஸ்டைல் இந்த `போனிடெயில்'. நெற்றிப் பகுதியிலிருந்து செதுக்கிவிடாமல் தலையின் கீழ்ப்பகுதியிலிருந்து கூந்தலைச் சீவவேண்டும். அப்போதுதான் நன்கு படிந்திருக்கும் முடிகளும் `பெளவுன்ஸாகி’ அடர்த்தியான மாயையை உருவாக்கும். அதோடு, முடி நீண்டிருப்பதுபோன்ற தோற்றத்தையும் இந்த போனிடெயில் கொடுக்கும். தலைமுடி நன்கு படிந்தபடி இல்லாமல், கலைந்தபடி இருப்பதே மெல்லிய கூந்தல்கொண்டவர்களுக்கு மிகவும் சிறந்தது.

பாப் கட்:

நீளமான முடி விரும்பாதவர்கள், யோசிக்காமல் `பாப் கட்' ஆப்ஷனைத் தேர்வுசெய்யலாம். இந்த ஸ்டைல், தலைமுடி அடர்த்தியாக இருக்கிறதா இல்லையா போன்ற கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பு கொடுப்பதேயில்லை. இதன் ஒருவகையான `பிக்ஸி (Pixie) கட், மெலிந்த முகங்களுக்கு ஏற்றது. விரும்பினால் `ஸ்ட்ரீக் (Streak)' போன்று தலைமுடியை முன்னிலைப்படுத்தும் ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம். `பிக் பாஸ்' ஓவியா செய்துகொண்ட சீரற்ற பாப் கட் சிறந்த சாய்ஸ். இது அதிகப்படியான வெயிலுக்கும் ஏற்றது.

அடுத்த கட்டுரைக்கு