Published:Updated:

''என் வயசு தெரியாது... ஆனா 40 வருசமா அப்பம் சுடுறேன்!'' - ஶ்ரீவில்லிபுத்தூர் முத்தம்மாள் பாட்டி

''என் வயசு தெரியாது... ஆனா 40 வருசமா அப்பம் சுடுறேன்!'' - ஶ்ரீவில்லிபுத்தூர் முத்தம்மாள் பாட்டி

''என் வயசு தெரியாது... ஆனா 40 வருசமா அப்பம் சுடுறேன்!'' - ஶ்ரீவில்லிபுத்தூர் முத்தம்மாள் பாட்டி

''என் வயசு தெரியாது... ஆனா 40 வருசமா அப்பம் சுடுறேன்!'' - ஶ்ரீவில்லிபுத்தூர் முத்தம்மாள் பாட்டி

''என் வயசு தெரியாது... ஆனா 40 வருசமா அப்பம் சுடுறேன்!'' - ஶ்ரீவில்லிபுத்தூர் முத்தம்மாள் பாட்டி

Published:Updated:
''என் வயசு தெரியாது... ஆனா 40 வருசமா அப்பம் சுடுறேன்!'' - ஶ்ரீவில்லிபுத்தூர் முத்தம்மாள் பாட்டி

``அம்மனுக்கு அடிக்கடி விரதம் இருப்பதால சொந்தக்காரங்க வீட்டுக்கோ, துக்க நிகழ்வுக்கோகூட போக முடியல. இதனால் யாருமே என்கூட பேச மாட்டாங்க. அம்மனுக்காக எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு இருக்கேன்’’ என்கிறார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்தம்மாள் பாட்டி .

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்தம்மாள். 80 வயது இருக்கலாம் என்று ஊராரால் கணிக்கப்படுகிற இவர் , ஒவ்வோர் ஆண்டும் சிவராத்திரி தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர்  முதலியார்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் சுடுநெய்யில் அப்பம் சுட்டு அம்மனுக்குப் படைத்துவருகிறார். இதைக் காண ஏராளமான பக்தர்கள் கூடிவிடுகின்றனர். அந்த நெய்யை அள்ளி, விபூதிபோல தன் உடலில் பூசிக்கொள்ளும் பாட்டி, பக்தர்களுக்கும் அந்த நெய்யை விபூதிபோல பூசிவிடுகிறார். சூடான எண்ணெய்யின் ஒரு துளி மேலே பட்டால்கூட கொப்புளம் உண்டாகும். ஆனால், கொதிக்கும் நெய்யில் இவர் கையைவிட்டாலும் ஒன்றும் ஆகாது. அதிசயம்தானே?

இந்த ஆச்சர்யமான சம்பவம் குறித்து முத்தம்மாள் பாட்டி பேசும்போது , ``சின்ன வயதிலேயே தந்தையை இழந்ததால், அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தார். இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி என்கூடப் பிறந்தவர்கள். இளவயதில பக்கத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில் பெண்களுடன் கும்மியடிப்பேன்; முளைப்பாரியும் தூக்குவேன். தொடர்ந்து 18 வருஷம் பூக்குழி இறங்கினேன். என் கையால் சுட்ட ஒரு அப்பமாவது படைக்கணும் என கனவில் தோன்றிய பத்ரகாளி அம்மன் கேட்டது  `இறுதி வரைக்கும் கூடவே வெச்சுக்கோ வேறு யாரையும் பக்கத்தில் விடக்கூடாது’ என, பத்ரகாளி அம்மனிடம் பட்டத்தரசி அம்மன் கேட்டு சத்தியம் வாங்கியது .

`எத்தனையோ பேர் இங்கே இருக்கும்போது என்னை மட்டும் ஏன் தாயி அனுப்பற’னு கேட்டேன். `உன்மேலதான் பத்ரகாளிக்கு ரொம்பப் பாசம். நீ போ அப்படி’னு சொல்லுச்சு. அப்போதிலேருந்து இன்னிக்கு வரைக்கும் அப்பம் சுட்டுப் படைக்கிறேன் .

என்னோட வயசு எத்தனைனு தெரியாது. ஆனா, நான் விரதமிருந்து அப்பம் சுடுவது 40 வருஷமாகச் செய்திட்டு இருக்கேன். விரதம்னா ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை, 40 நாள் விரதமிருந்துதான் அப்பம் சுடுவேன். விரதம் இருக்கிற நாள்ல வெறும் சோறு, கத்தரிக்காய், கொஞ்சம் பருப்புதான் சாப்பிடுவேன். வேறு எதுவும் சாப்பிட மாட்டேன். சிவராத்திரி அன்னிக்கி இரவு 11 மணிக்கு அப்பம் சுட உட்கார்ந்தால், காலை  5.30 மணிவரை சுடுவேன். எத்தனை அப்பம் சுடுகிறோம் என்பதை எண்ண முடியாது. அம்மனுக்குக் கொடுத்த சத்தியத்தை ஒவ்வொரு வருஷமும் நிறைவேத்தும்போது அவ்வளவு சந்தோசமா இருக்கும்.

நான் அப்பம் சுடறதைப் பார்க்க பக்கத்து ஊர்ல மட்டுமல்லாம வெளிநாட்ல இருந்தெல்லாம் ஆளுங்க வருவாங்க. அவங்களைப் பார்க்கறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். இத்தனை வருஷமா சுடும் நெய்யில கைய விட்டாலும் அம்மன் என் கூடவே இருக்கிறதால என் கைக்கு ஒண்ணுமே ஆகல. ஆனா, இந்தக் கைய யாரிடமும் காட்டக் கூடாதுனு அம்மன் உத்தரவிட்டிருக்கு. அதனால, யாரிடமும் கையைக் காட்ட மாட்டேன் . ரொம்ப நாள் அம்மனுக்காக விரதமாவே இருப்பதால அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சினு சொந்தக்காரங்களோட துக்க நிகழ்ச்சிக்குக்கூட என்னால் செல்ல முடியவில்லை. அதனால யாரும் என்னோடு பேசுவதில்லை. அம்மனுக்காக எல்லோரையும் ஒதுக்க வேண்டியதாயிருச்சு. கூடப்பிறந்தவங்க யாருமே இப்ப உயிரோட இல்ல... சொந்தக்காரங்க வீட்டுக்கும் போகாத என்னோட இறுதி காரியத்துக்கு யார் வரப்போறாங்களோ?’’ எனக் கண் கலங்குகிறார் .