Published:Updated:

ஒரு வருடத்தில் சந்தோஷத்தைத் தொலைத்த இந்தியர்கள்..! - ஐ.நா-வின் மகிழ்ச்சி இண்டக்ஸில் பின்னடைவு

ஒரு வருடத்தில் சந்தோஷத்தைத் தொலைத்த இந்தியர்கள்..! - ஐ.நா-வின் மகிழ்ச்சி இண்டக்ஸில் பின்னடைவு
ஒரு வருடத்தில் சந்தோஷத்தைத் தொலைத்த இந்தியர்கள்..! - ஐ.நா-வின் மகிழ்ச்சி இண்டக்ஸில் பின்னடைவு

ந்தியர்கள் கடந்த ஒரு வருட காலமாக மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டார்கள் என்று ஐ.நா அமைப்பின் மகிழ்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது. 

அதேவேளையில் 2019ம் ஆண்டுக்கான மகிழ்ச்சி இண்டெக்ஸ் பட்டியலில் உலகத்தின் வல்லரசு நாடுகள் முதல் 10- க்குள் இடம்பெறவில்லை. பிரிட்டனுக்கு 15- வது இடம் கிடைத்துள்ளது. ஜெர்மனி 15- வது இடத்திலிருந்து 17- வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. அமெரிக்கா 18- வது இடத்திலிருந்து 19- வது இடத்துக்கு இறங்கியுள்ளது. ஜப்பான் - 58, ரஷ்யா - 63, சீனாவுக்கு 93- வது இடம். இந்த வரிசையில் கடந்த ஆண்டு 133- வது இடத்தில் இருந்த இந்தியா 140- வது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. தெற்காசியாவில் பாகிஸ்தானியர்கள்தான் மகிழ்ச்சியானவர்கள். பாகிஸ்தானுக்கு 67- வது இடம். பூடான் 95, வங்கதேசம் 125, இலங்கை 130 வது இடத்தைப் பிடித்துள்ளன. தெற்காசியாவில் மகிழ்ச்சியற்ற நாடுகளில் இந்தியாவுக்கே கடைசி இடம்.

ஸ்கான்டினிவியன் நாடுகளைச் சேர்ந்த மக்கள்தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியானவர்கள். அந்தவகையில், மகிழ்ச்சியான மனிதர்கள் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் ஆகிய ஸ்கான்டினிவியன் நாடுகள் பட்டியலில் முதலிடங்களை ஆக்கிரமித்துள்ளன. நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா முதல் 10 நாடுகளுக்குள் இடம் பெற்றுள்ளன. மகிழ்ச்சியற்ற மக்கள் நிறைந்த நாடுகள் பட்டியலில் ஹைதி முதலிடத்தைப் பெற்றுள்ளது. போட்ஸ்வானா, சிரியா, மாலவி, ஏமன், ருவாண்டா, தான்சேனியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்கா குடியரசு, தெற்கு சூடான் நாடுகள் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன. மகிழ்ச்சியற்ற மக்கள் நாடுகளில் உள்நாட்டுப் போராலும் அரசியல் நிலையற்றத்தன்மையாலும் மக்கள் சந்தோஷத்தை இழந்து தவிக்கிறார்கள்.