Published:Updated:

`என் காதலுக்கு வாழ்த்துகள்!'- திருமண நாளில் அணி வீரர்களை அசரவைத்த யூஃசுப் பதான்

டி-20 ஸ்பெஷலிஸ்டான யூசுப் பதான் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். யூசுப் பதானுக்கும் -  அஃப்ரீன் கானுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணமானது. இவர்கள் நேற்று தங்களது 6-வது திருமண நாளை கொண்டாடினர். என் காதலுக்கு வாழ்த்துகள் என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் யூஃசுப். கிரிக்கெட் வீரர்கள் பிரபலங்கள் என ஏராளமானோர் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். தனது திருமண நாளை முன்னிட்டு அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு மாலையில் யூஃசுப் விருந்து அளித்துள்ளார்.

`என் காதலுக்கு வாழ்த்துகள்!'- திருமண நாளில் அணி வீரர்களை அசரவைத்த யூஃசுப் பதான்

விருந்தில் வெளுத்து வாங்கிய வீரர்கள் அந்தப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வாழ்த்துகளையும் தட்டிவிட்டுள்ளனர். சன்ரைசர்ஸ் வீரர் சந்தீப் ஷர்மா, இனிய திருமண நாள் வாழ்த்துகள் யூஃசுப். இந்த அருமையான விருந்திற்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல் கடந்த ஐபிஎல் போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சன் ரைசர்ஸ் வீரர் ரஷீத் கான், இந்த ருசியான விருந்து அளித்ததற்கு நன்றி யூசுப் பாய், உங்களுக்கு எனது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

`என் காதலுக்கு வாழ்த்துகள்!'- திருமண நாளில் அணி வீரர்களை அசரவைத்த யூஃசுப் பதான்

இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் அணி நாளை நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராய்ஸ் அணி தனது சொந்த ஊரில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக அட்டகாசமான விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் யூசுப்.