Published:Updated:

``என் டிரஸ் சென்ஸுக்கு காரணம் சினேகா மேடமும் டி.டியும்தான்'' - ராஜா ராணி ஶ்ரீதேவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``என் டிரஸ் சென்ஸுக்கு காரணம் சினேகா மேடமும் டி.டியும்தான்'' - ராஜா ராணி ஶ்ரீதேவி
``என் டிரஸ் சென்ஸுக்கு காரணம் சினேகா மேடமும் டி.டியும்தான்'' - ராஜா ராணி ஶ்ரீதேவி

"மாதத்தின் தொடக்கத்திலேயே சீரியலோட கதை நகர்வை தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி நகைகளைப் போடுவேன். ரியல் லைஃப்பில் நானும் கணவரும் மேட்சிங்காதான் டிரஸ் போடுறோம். அதனால ரெண்டு பேரும் ஃப்ரீ ஆகிட்டா ஷாப்பிங்தான்."

விஜய் டிவி `ராஜா - ராணி’ சீரியலில் நெகட்டிவ் ரோல், கணவருடன் இணைந்து டிக்டாக், சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கான சங்கத்தில் பதவி எனப் பரபரப்பாக இருக்கும் ஸ்ரீதேவியின் ஃபேஷன் பக்கம் இது.

ஆடைத்தேர்வு:

"டிரெடிஷனல் டிரஸ்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். விதவிதமான ரகங்களில் நிறைய புடவை கலெக்‌ஷன்ஸ் வெச்சிருக்கேன். என்னுடைய ஆடை யுனிக்கா இருக்கணும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பேன். அதனால நான் டிரஸ் செலக்‌ஷனுக்குப் போனா அதிக நேரம் எடுத்துப்பேன். பிராண்டட் டிரஸ் கரெக்ட்டா ஃபிட் ஆகும் என்பதால் பெரும்பாலும் பிராண்டட் டிரஸ்தான் என்னுடைய சாய்ஸ். சீரியலைப் பொறுத்தவரை என்னுடைய ரோலுக்குப் புடவைதான் காஸ்டியூம்னு சொல்லிட்டாங்க. அதனாலென்ன அதுலேயும் வெரைட்டி காட்டுறேனு சொல்லி கொஞ்சம் டிரெண்ட்டியா காட்டினேன். விதவிதமான காட்டன் புடவைகள், கான்ட்ராஸ்டான நிறத்தில் ப்ளவுஸ்னு, அதுலேயும் போட் நெக், குளோஸ் நெக்,லோ நெக், ஹை நெக், பேட்டர்ன் வொர்க் ப்ளவுஸ்னு நிறைய வெரைட்டி காட்ட ஆரம்பிச்சேன். ஆனா, நான் ஜீன்ஸ் டி சர்ட்ல இருந்தாதான் என் கணவருக்குப் பிடிக்கும். 

அக்ஸசரீஸ் :

டிரஸ்ஸிங்க்கு மேட்சிங்கான நகைகளைப் போடுவதைவிட நீட் அண்டு சிம்பிள் லுக் கொடுக்கும் நகைகளை அணிவதுதான் என் ஸ்டைல். எனக்கு லைட் வெயிட் ஜூவல்லரிகள் ரொம்பப் பிடிக்கும். சிங்கிள் ஸ்டோன் ஜூவல்ஸ் கலெக்‌ஷன்கள் நிறைய இருக்கு. வாட்ச்தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். வாட்ச் இல்லாமல் எங்கும் போக மாட்டேன். கிராண்ட் லுக், டிரெண்டி லுக், சிம்பிள் லுக் என எல்லா வித ஆடைகளுக்கும் பொருந்தும் வாட்ச்கள் வெச்சிருக்கேன். எப்போ ஷாப்பிங் போனாலும் கண்ணில் பட்டு மனசுக்கு பிடிச்சுப்போன வாட்ச்சை உடனே பில் போட்டுருவேன். சீரியலைப் பொறுத்தவரை புடவைக்கு பொருந்தக்கூடிய டெம்பிள், ஆன்டிக் டைப் நகைகளைத் தேடித்தேடி அணிகிறேன். சீரியலில் என்னுடைய ஜூவல்லரி செலக்‌ஷன் சூப்பரா இருக்குனு நிறைய கமென்ட் வருது. டிரெண்டில் களமிறங்கியுள்ள ஃபேப்ரிக் ஹோம்மேட் நகைகளை அணிய ஆரம்பித்திருக்கிறேன்.

ஷாப்பிங் :

ஷாப்பிங் போகும்போதே என்ன வாங்கணும் என்பதை பிளான் பண்ணித்தான் போவேன். தேவையில்லாததை வாங்கிக் குவிக்கிற பழக்கம் எனக்கு இல்ல. பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி என்ன வாங்கணும், எங்க வாங்கணும் என்பதை முதலிலே பிளான் பண்ணிப்பேன். மாதத்தின் தொடக்கத்திலேயே சீரியலோட கதை நகர்வை தெரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி நகைகளைப் போடுவேன். ரியல் லைஃப்பில் நானும் கணவரும் மேட்சிங்காதான் டிரஸ் போடுறோம். அதனால ரெண்டு பேரும் ஃப்ரீ ஆகிட்டா ஷாப்பிங்தான். 

நிறத்தேர்வு:

எனக்கு பிளாக் அண்டு பிங்க் கலர்ஸ்தான் ரொம்பப் பிடிக்கும். வார்ட்ரோப்ல அதுக்குனு தனி இடம் இருக்கு. சீரியலுக்கு அப்படிப் போட்டுட்டுப் போய் நடிக்க முடியாது. போர் அடிச்சிரும். அதனால லைட் கலர்ஸ் என் சாய்ஸ்.

ஆன்லைன் ஷாப்பிங்:

ஆன்லைனில் டிரெஸ் வாங்கினால் பெரும்பாலான சமயத்தில் நிறம், சைஸ் மாறித்தான் வருகிறது என்பதால் ஆன்லைனில் டிரெஸ் வாங்குகிறதை தவிர்த்துட்டேன். காஸ்மெட்டிக்ஸ், அக்ஸசரீஸ் வாங்குவதற்கு ஆன்லைன் பெஸ்ட் சாய்ஸ். அப்டேட்டான நிறைய வெரைட்டி இருக்கும். யுனிக்காகவும் தேர்வு செய்ய முடியும்.

மேக்கப்:

ஷூட்டிங்கில்கூட எனக்கான மேக்கப்பை நானே போட்டுப்பேன். ஐ-மேக்கப்பில் அதிகம் கவனம் செலுத்துவேன். கண்ணுக்கு காஜல் இல்லாமல் என்னை நீங்கள் பார்க்கவே முடியாது. அதே போல் வெரைட்டியான ஹேர் ஸ்டைல் செய்துக்கவும் ரொம்பப் பிடிக்கும். யூடியூப் பார்த்து அதே மாதிரி டிரை பண்ணுவேன். ஷூட்டிங்கில் ஹேர் ஸ்டைல் மட்டும் ஆர்டிஸ்ட் மூலம் பண்ணிப்பேன். அதுவும் வெரைட்டி லுக்கில்.

செலிபிரெட்டி சாய்ஸ்:

எனக்கு சினேகா மேம், டி.டி மேடமின் டிரஸ்ஸிங் ரொம்பப் பிடிக்கும். அவங்கள மாதிரியே இமிடேட் பண்ண டிரைப் பண்ணிருக்கேன். ரெண்டு பேரும் அவங்களோட ஆடைத்தேர்வில் மாஸ் காட்டுவாங்க. எதாவது ஒரு ஃபங்ஷன் போகணும்னா அவங்க ரெண்டு பேரையும் ரெஃபரன்ஸ் எடுத்துதான் ரெடி ஆவேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு