Published:Updated:

`இதுக்கும் OTP கேட்பீங்களா சார்?’ ஓலா கழிவறைகளைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

`இதுக்கும் OTP கேட்பீங்களா சார்?’ ஓலா கழிவறைகளைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
`இதுக்கும் OTP கேட்பீங்களா சார்?’ ஓலா கழிவறைகளைக் கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

ப்ரல் 1-ம் தேதி முட்டாள் தினமாக அனுசரிக்கப்படுவதால் உலகம் முழுக்கவே நிறைய வேடிக்கையான சம்பவங்கள் அன்றைக்கு நடைபெறும். தனிநபர்கள் முதல் பிரமாண்ட கார்ப்பரேட்டுகள் வரை அனைவருமே ஏதாவதொரு பிராங்க் செய்து பிறரை ஏமாற்றுவர். இதில் சில விஷயங்கள் நிஜமாகவே சுவாரஸ்யமாக ஹிட் அடித்துவிடும். சில விஷயங்கள் சப்பென முடிந்துவிடும். சில சமயம் இது தவறாக முடிந்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கெல்லாம் சென்றுவிடும். இந்தப் பிரச்னையைத் தவிர்க்கத்தான் இந்த ஆண்டு முதல் வாடிக்கையாளர்களை வைத்து எந்தவொரு பிராங்க்கும் வேண்டாம் என தன்னுடைய அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். 

ஆனால், ஓலா இதில் தனிரகம் போல. ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது முயற்சிகள் மூலம் பிராங்க் செய்ய முயற்சி செய்துவருகிறது அந்நிறுவனம். இந்த வருடம் அப்படி கையிலெடுத்திருக்கும் விஷயம் ஓலா ரெஸ்ட்ரூம்ஸ். `திடீர்னு அவசரம்ன்னா என்ன பண்ணுவீங்க?’ ஆப்ல ஒரே ஒரு டச் பண்ணுங்க. சட்டுன்னு மொபைல் டாய்லெட்டோட நாங்க வந்துடுறோம்’’ என ஜாலியாக விளம்பரம் வெளியிட்டிருக்கிறது ஓலா. இதையடுத்து ``இதுக்கும் OTP கேட்பீங்களா?’’, ``ஏப்ரல் 1-க்கு ரெண்டு நாள் முன்னாடியே வந்துட்டீங்களே?’’ என்றெல்லாம் கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

ஓலா இப்படி பிராங்க் செய்வது முதல்முறையல்ல. ஏற்கெனவே ஓலா நியூஸ் நெட்வொர்க் (ONN), செல்ஃப் டிரைவிங் ஓலா வீல்ஸ், ஹெலிகாப்டர் ரைடுக்கு என ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு பிராங்க்கை முயற்சி செய்து பல்பு வாங்குகிறது. இந்த ஆண்டும் அதே கதைதான்.