Published:Updated:

"பறக்கும் பாவையர்!"

சர்... சர்க்கஸ்

"பறக்கும் பாவையர்!"

சர்... சர்க்கஸ்

Published:Updated:

''அந்தரத்தில் தொங்குதடா வாழ்க்கை... பம்பரமாச் சுத்துதடா பூமி''- சர்க்கஸ் தொழிலாளர்களின் சாகசத்தைப் பார்த்தபோது, இந்த வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி போடப்பட்டு இருக்கும் ஜெமினி சர்க்கஸ்தான் இப்போது சிங்காரச் சென்னை மக்களுக்குப் புதிய பொழுதுபோக்கு.  

"பறக்கும் பாவையர்!"

அந்தரத்தில் பறந்தபடி நடனம் ஆடி வியக்கவைத்த கென்யாவைச் சேர்ந்த ஜூமா, ''எங்க குரூப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியானு  நிறைய நாடுகளில் டான்ஸ் ஆடி இருக்கு. சென்னையில் டான்ஸ் ஆடுறது ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. சென்னைக்கு நாங்க வர்றது இது இரண்டாவது முறை. அந்தரத்தில் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடும்போது, கீழே இருக்கிற ஆடியன்ஸும் சேர்ந்து ஆடுவாங்க. அதைப் பார்க்கும்போது, எங்க கஷ்டம் எல்லாம் காணாமல் போயிடும். இப்ப விலங்குகளை சர்க்கஸில் பயன்படுத்தக் கூடாதுனு அரசாங்கம் சட்டம் கொண்டுவந்துட் டாங்க. அந்த இடத்தை நிரப்ப, நாங்க டான்ஸ் ஆடு றோம்.  அதுக்காக நீங்க அனிமல்ஸானு கேட்காதீங்க!'' என்று சிரிக்கிறார்.

''சின்ன வயசுல இருந்தே சாகசம்னா சந்தோஷமாச் செய்வேன்.  இப்ப எனக்கு 38 வயசு. ஒரு தடவைக்கூட கீழே தவறி விழுந்தது கிடையாது. 40 அடி உயரத்துல இருந்துப் பாக்குறப்ப மக்கள் குட்டிக் குட்டியாத் தெரிவாங்க. அவங்களோட கைதட்டல்தான் எங்களுக்கு எனர்ஜி டானிக். எங்களுக்கெல்லாம் சாகசம் பழகிருச்சு. ஒருநாள்கூட சாகசம் பண்ணாம இருக்க முடியாது. ஒருமுறை குஜராத்துல சாகசம் பண்றப்ப 'நானும் உங்கக்கூட அந்தரத்துல தொங்குவேன்’னு ஒரு ஆள் ரகளைப் பண்ணினார். வேற வழி இல்லாம அந்த ஆளை மேல ஏத்தி விட்டோம்.  பயத்துல அவருக்கு கால்

"பறக்கும் பாவையர்!"

நடுங்க ஆரம்பிச்சிருச்சு. 'மன்னிச்சுக் கோங்க. நீங்க எவ்வளவு ரிஸ்க் எடுத்து பண்றீங்கன்னு இப்போதான் புரியுது’னு அழுது புலம்பிட்டார். பிறகு அவரைக் கீழே இறக்கிவிட்டோம். நான் சாகசம் பண்ணும்போதுகூட பயம் இல்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமா சர்க்கஸுக்கு வர்ற கூட்டம் குறைஞ்சிட்டே போறதுதான் பயமா இருக்கு'' என்று  நொர்ஸ் பேசும்போதே குரல் உடைகிறது.  சர்க்கஸில் நடனம் ஆடும் ரஷ்ய நாட்டுப் பெண் அனியா, ''சென்னையில் பிடிச்ச விஷயமே பசங்களோட விசில் சத்தம்தான். அதிர அதிர விசில் அடிப்பாங்க. இன்னும் ஆறு மாசத்துக்குத்தான் விசா இருக்கு. அதுக்கு உள்ள நிறைய இடங்களில் நிகழ்ச்சிப் பண்ணணும்'' என்றவரை தொடர்கிறார் தயா. ''நாங்க கண் ணாடித் துண்டுகள் மேல டான்ஸ் ஆடும்போதும், நெருப்பை கக்கும்போதும் பல பேர் பயப் படுவாங்க. ஆனால், அவங்களின் பயம்தான் எங்களின் சக்சஸ்'' என்கிறார்.

சுபாஷ்-ஷீலா இரண்டு பேரும் சைக்கிள் தம்பதி. ''கூட்டம் கம்மியா வந்தாலும் சென்னை மக்கள் சர்க்கஸை ரொம்பவே என்ஜாய் பண் றாங்க.  சமயத்தில் 1,500 பேர் உட்காரும் இடத் தில் வெறும் 50 பேர் மட்டும்தான் இருப்பாங்க. லீவு நாட்கள்ல மட்டும் கூட்டம் நிறைய வரும். சென்னை  மக்களுக்காகவே நிறைய வெரைட்டி ஆன சாகசம் பண்ணுவோம்'' என்கிறார் சுபாஷ்.

"பறக்கும் பாவையர்!"

டிரெய்னிங் மாஸ்டர் தாசன், ''46 வருஷமா இவங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறேன். நம்ப சூர்யா தம்பிக்குக்கூட '7ஆம் அறிவு’ படத்துக்காக நான்தான் பயிற்சி கொடுத்தேன். கப்புனு கத்து கிட்டார்.  ஏழெட்டு வருஷம் முன்னாடி நிறைய மிருகங்கள் இருந்துச்சு. மிருக வதைத் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து கூட்டம் குறைய ஆரம்பிச்சிருச்சு.  சர்க்கஸ் கலைகளை அரசாங்கம் முறையா அங்கீகரிச்சு,  சர்க்கஸ் கலைஞர்களுக்கு  விருது தரணும்கிறது எங்க ளோட ரொம்ப நாள் கோரிக்கை. ஏன்னா இவங்கதான் ரியல் ஹீரோஸ்'' என டச்சிங்கோடு முடித்தார்.

"பறக்கும் பாவையர்!"

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ப.சரவணகுமார்    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism