Published:Updated:

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

Published:Updated:

சென்னையின் பரபர வாழ்க்கையில் ஒரு செல்லப் பிராணி வளர்ப்பதே பெரும் சாதனை. ஆனால், நகரின் மையப் பகுதியான ராயப்பேட்டையில் புறா, குதிரை, நாய், சேவல், லவ் பேர்ட்ஸ் என வீட்டையே மினி சரணாலயம் ஆக்கியிருக்கிறார் நாகராஜன். வீட்டுக்குள் நுழைந்தால் காட்டுக்குள் நுழைந்த எஃபெக்ட்!

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாடியில் புறாக்களுக்குத் தீனிப் போட்டுக்கொண்டு இருந்தவர்,  உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். 'எங்க கொள்ளுத் தாத்தா பொழுதுபோக்குக்காகக் குதிரைகள், புறாக்கள் வளர்த்துருக்கார். எங்க தாத்தா புறாப் பந்தயத்தில் வெள்ளைக்காரர்களை ஜெயிச்சு பதக்கங்கள் குவிச்சவர். எங்க அப்பாவும் குதிரை, புறாப் பந்தயங்கள்ல பரிசுகளை அள்ளியவர்.

இந்த மாதிரி அடுக்குமாடி வீடு எல்லாம் இல்லாத காலம் இல்லையா அது? மரம், செடி, கொடினு இந்த ஏரியாவே அவ்வளவு ரம்மியமா இருக்கும். அதனால் இதை எல்லாம் வளக்கிறதுக்கு அப்ப வசதி இருந்துச்சு. வெளி ஏரியாக்காரவங்க பிக்னிக் மாதிரி அப்ப எங்க வீட்டை வந்துப் பாத்துட்டுப் போனது இன்னமும் நினைவில் இருக்கு.

நான் விலங்கு, பறவைகள்னு பார்த்தே வளர்ந்தவன். அதனால்தான், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைனு இதுகளை வளர்க்கிறேன். எங்க வீட்டை எடுத்துக் கட்டினப்பகூட இதுங்களுக்கு ஏத்த மாதிரி கட்டுங்கண்ணு சொல்லிதான் கட்டினேன்.

நாங்க இப்ப இட்லிக் கடை நடத்துறோம். அந்த வருமானத்துலதான் இதுங்களை எல்லாம்  பராமரிக்கிறோம். அதனால், முன்ன மாதிரி இப்ப குதிரைகளை நிறைய வளர்க்க முடியலை. ஆனா, எங்கக்கிட்ட இருக்கிற புறா வகைகளை சரணாலயங் கள்லகூட பார்க்க முடியாது. கர்ணம், ஒமர்னு ஏகப்பட்ட வகைகள்.

கர்ணப் புறா பறக்கும்போது அந்தரத்தில் கர்ணம் அடிக்கிறதைப் பாக்குறப்பப் பரவசமா இருக்கும். ஒமர் புறா ரொம்பவே ஸ்பெஷல். இது அந்தக் காலத்தில் அரசர்கள் தூது அனுப்பப் பயன்படுத்தினது. இதை நீங்க டெல்லியில் கொண்டுபோய்விட்டாலும் இந்த வீட்டைச் சரியாக் கண்டுபிடிச்சு வந்துடும். அந்த அளவுக்குப் புத்திசாலி!

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

இங்கே உள்ள எல்லாப் புறாக்களையும் காலையில் 8 மணிக்கு தீனிப் போட்டு, பறக்கவிட்டாச் சரியா சாயங்காலம் 6 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வர்ற மாதிரி வீடு திரும்பிடும். இந்தப் புறாக்கள் மாதிரியே நாங்களும் ஒற்றுமையா இருக்கோம். நான் புறாக்களைப் பார்த்துக்குறேன்.  என் அண்ணன் ஜெயச்சந்திரன் குதிரைகளையும் என் பசங்க  கோழிகள், லவ் பேர்ட்ஸ்களையும் பார்த்துக்குறாங்க.

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!
ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

புறாப் பந்தயம்னா கண்டிப்பா கலந்துப்போம். நடுவர்கள் காலையில் 8 மணிக்கு நம்ம வீட்டுக்கு வந்து புறாக்களுக்குத் தீனிப் போட்டு பறக்க விடுவாங்க. கீழே இறங்காமத் தொடர்ந்து எட்டு மணி நேரம் பறந்து சாயங்காலம் 4 மணிக்குத் திரும்பணும். 4 மணிக்கு ஒரு நிமிஷம் முன்னதா இறங்கினாலும் அதுங்க அவுட். இந்த மாதிரி தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்தப் பந்தயம் நடக்கும். சரியா சொல்லணும்னா நான் தலப்பட்டு இதுவரைக்கு 25 பந்தயம் ஜெயிச்சிருக்கோம்'' என்று சிரிக்கிறார் நாகராஜன்.

குதிரைகளைப் பராமரிக்கும் ஜெயச்சந்திரன், ''இப்ப எங்கக்கிட்ட விஜய், விக்னேஷ்னு ரெண்டு குதிரைங்க இருக்கு. விஜய்க்கு ஆறு,  விக்னேஷ§க்கு எட்டு வயசு. இரண்டையும் என் புள்ளைங்க மாதிரிப் பாத்துக்குறேன். விஜய் போட்டிக்கு வர்றான்னு தெரிஞ்சா, மத்த குதிரைகள் எல்லாம் இடத்தை காலி பண்ண வேண்டியதுதான். என் கண் அசைவுக்குத் தகுந்த மாதிரி நடக்கும். நான் கோபமா இருந்தாக் கொஞ்சி சமாதானப்படுத்தும். அந்த அளவுக்கு என் மேல பாசம். விக்னேஷ் கொஞ்சம் மக்கு. ஆனால், ரேஸ்ல நல்லா ஓடுவான். இதுவரை கிட்டத்தட்ட 600 பந்தயங்களுக்கு மேல கலந்துக்கிட்டு இருப்பேன். அதுல 400 பந்தயங்களுக்கு மேல ஜெயிச்சி இருக்கேன்'' என்றவரிடம், ''அக்கம்பக்கத்துலக் குடியிருக்குறவங்க என்ன சொல்றாங்க?'' என்றதும் பகபகவென சிரிக்கிறார்.

''சார், அவங்களுக்கு எங்களைவிட இவங்கதான் சார் ஃப்ரெண்டு. பந்தயத்துக்குப் போயிட்டா, எப்ப வரும்னு தவிச்சுக்கிடப்பாங்க. அதே மாதிரி காலையில எங்க வீட்டு மாடியில் புறாக்களைப் பறக்கவிடுறப்ப அதைப் பாக்குறதுக்காகவே மாடிகள்ல கூடி நிக்கிற நிறைய ஆட்களைப் பார்க்கலாம். 'இதுங்களை வளர்க்குற இடத்தை வாடகைக்குவிட்டால் நல்லா காசு பார்க்கலாம், செலவும் மிச்சம்’னு பல பேரு சொல்வாஙக. இதுங்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் செலவு பண்றோம். ஆனால், இந்த வரவு செலவு கணக்கெல்லாம் நாங்க பாக்குறதே இல்லை. யாராவது சொந்தப் புள்ளைங்களுக்கு செலவு பண்றதைக் கணக்குப் பாப்பாங்களா தம்பி?'' என்றபடி பாசத்தோடு விஜயைத் தடவிக் கொடுக்கிறார். அதுவும் ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டுகிறது!

ரேஸில் முந்தும் விஜய், விக்னேஷ்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism