Published:Updated:

கார் விற்பனை ஏன் குறைந்தது? #VikatanInfographics

பல காரணங்களால் முதல் முறை கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், பழைய காரை மாற்றுபவர்கள், பெரிய கார் வாங்குபவர்கள் மற்றும் தொழில்ரீதியாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. 

கார் விற்பனை ஏன் குறைந்தது? #VikatanInfographics
கார் விற்பனை ஏன் குறைந்தது? #VikatanInfographics

ட்டோமொபைல் துறை, இந்திய தொழில்துறையின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் தேக்கம் ஜிடிபி-யை நேரடியாகப் பாதிக்கும். டிசம்பர் மாதம் மிக மோசமான நிலையில் இருந்த விற்பனை, ஜனவரி மாதம் கொஞ்சம் தேறியது. ஆனால், பிப்ரவரி மாதம் மீண்டும் தேக்கநிலைதான். கடந்த அக்டோபர் மாதம் முதல், கார் விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இந்தியாவில் மற்ற செக்மென்ட்டுகளை ஒப்பிடும்போது என்ட்ரி லெவல் கார்களின் விற்பனை எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், சமீபத்தில் சூழல்கள் மாறியுள்ளன. கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் ஆல்ட்டோவோ, சான்ட்ரோவோ இல்லை. ஸ்விஃப்ட் டிசையர். அதேபோல், கடந்த அக்டோபர் முதல், கார்கள் விற்பனையில் அதிகம் பாதிப்படைந்தது சிறிய கார்கள்தான். சிறிய கார்களின் விற்பனை குறைந்துகொண்டிருக்க, இந்தத் தேக்கநிலையிலும் வளர்ச்சியைக் கண்டுள்ளது இனோவா, XUV500, ஜீப் காம்பஸ் போன்ற மிட் சைஸ் எஸ்யூவி செக்மென்ட்.