Published:Updated:

ஜாங்கிட் உள்பட 6 அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு

சென்னை, மார்ச் 29,2011

தமிழகத்தில் தேர்தலையொட்டி, இடமாற்றம் செய்யப்பட்ட ஜாங்கிட் உள்பட 6 போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ##~~##

இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கே.ஞானதேசிகன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட ஏடிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூரில் செயல்படும் மத்திய காவலர் தேர்வு பள்ளியின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு போலீஸ் அகாதெமியின் ஐஜியாக பி. பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஐஜியாக ஏ. பாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு டிஐஜியாக ஒய். ஜான் நிக்கல்சன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் துறை தலைமையக உதவி ஐஜியாக ஏ.ஜி. பாபு நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சி பிரிவு எஸ்.பி.யாக ஆர். சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.